பெண் வேடத்தில் நடிகைகளை மிஞ்சிய அழகில் ஜொலிக்கும் ஆண்!
இணையத்தில் எத்தனையோ வீடியோக்கள் பதிவேற்றப்பட்டாலும் ஒரு சில வீடியோக்கள் உங்களை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.
அதிலும் பல சுவாரஸ்யமான வீடியோக்களும் அவ்வப்போது உலாவிக் கொண்டிருக்கின்றது. அதில் எமது கண்ணில் பட்ட வீடியோ ஒன்று தான் இந்த வீடியோ,
திடீரென பெண்ணாக மாறிய ஆண்
இந்த வீடியோவில் நிறைய தலைமுடிகளுடன் ஒரு ஆண் பெண் வேடம் போட்டிருக்கிறார். முதலில் அந்த வீடியோவில் வந்தது ஒரு ஆண், ஆனால் கொஞ்சம் போக போக தான் தெரிகிறது அவர் ஒரு அழகான பெண்ணாக மாறிவருவது,
எல்லாம் முடிந்ததும் அவரைப் பார்க்கும் போது சினிமா நடிகையை தூக்கி சாப்பிடும் அளவிற்கு மாறியிருக்கிறார்.
இவரின் இந்த வீடியோ ராட்சசி2.0 என்ற பெயரில் இன்று காலை 9 மணியளவில் பதிவேற்றப்பட்டது. அந்தக் கொஞ்ச நேரத்தில் இந்த வீடியோவிற்கு அத்தனை லைக்குகளும் கமெண்டுகளும் குவித்து வருகின்றது.
இன்னொரு கணம் பார்த்தால் கூட இவர் ஒரு ஆண் என்ற எண்ணம் தோன்றவே இல்லை. அந்த பெண் வேடத்தில் அப்படியொரு அழகியாக ஜொலிக்கிறார்.