மறைந்த நடிகையை போன்று இருக்கும் பெண்! பிரபலங்களை திசை திருப்பிய காட்சி
அச்சு அசலாக தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை சௌந்தர்யாவைப் போல் இருக்கும் பெண்மணியின் ரீல்ஸ் வீடியோக்காட்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் 90 கள் காலப்பகுதியில் இளைஞர்களின் இதயத்தை வென்று பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் தான் நடிகை சௌந்தர்யா.
இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் கொடிக்கட்டி பறந்துள்ளார். இவரின் நடிப்பால் இவர் அன்றைக்காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, உலகநாயகன் கமலஹாசன், கார்த்திக், விஜயகாந்த உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் நடிகையாக திகழ்ந்தார்.
மேலும் இவர் மட்டுமன்றி இவரின் தந்தையும் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராகவும், திரைப்பட எழுத்தாளராகவும் பணியாற்றி வந்தார்.
சௌந்தர்யா முதலில் மருத்துவம் படித்தாகவும் நடிப்பிலிருந்த ஆர்வத்தினால் சினிமா பக்கம் வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கிய சௌந்தர்யா
இதனை தொடர்ந்து இவர் கடந்த 2000ஆம் ஆண்டு ஜி.எஸ் ராகு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் சௌந்தர்யா சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்து “பாரதிய ஜனதா” கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஹெலிகாப்டரில் சென்றுக் கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகிய 2004 ஆம் உயிரிழந்துள்ளார்.
இவரின் இழப்பு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பாக இருந்தது. மேலும் சௌந்தர்யா இறக்கும் போது இரண்டு மாதக்கர்ப்பிணியாக இருந்தமை அவரை உடற்கூறு பரிசோதனை செய்யும் போது தெரியவந்துள்ளது.
மறு ஜென்ம எடுத்து வந்த பிரபலம்
இந்த நிலையில் இவர் இறந்து 19 வருடங்கள் ஆகின்ற நிலைமையில் அச்சு அசல் இவரை போலவே இருக்கும் பெண்ணின் ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவரின் முகம் மட்டுமன்றி இவரின் எக்ஷன் மற்றும் ஸ்டைல் எல்லாமே நடிகை சௌந்தர்யாவை போலவே இருக்கிறது.
இந்த வீடியோக்களை பார்க்கும் போது “நடிகை சௌந்தர்யா தான் மீண்டும் வந்திருக்கிறார் ” என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.