80s நடிகர்களின் கூட்டணியில் பங்கேற்ற 90s நடிகை மீனா! ரம்யா கிருஷ்ணனின் வைரல் பதிவு
80s நடிகர்களின் கூட்டணியில் பங்கேற்ற 90s நடிகை மீனா! வைரலாகும் புகைப்படங்கள் நடிகை மீனா 80s நடிகர்களின் கூட்டணியில் பங்கேற்ற புகைப்படங்களை நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை மீனா
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
80களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பின் 90களில் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கொடிகட்டி பறந்தவர்.
இவர் ரஜினி உடன் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் மிகவும் பிரபலமான படம் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர் ரஜினிக்கு ஜோடியாகவே எஜமான், முத்து போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இந்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் மீனாவின் அழகுக்கு இன்றும் ரசிகர்கள் இருக்கின்றார்கள். தற்போது சினிமா துறையில் இருந்து விலகியிருக்கும் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக விஜய் நடிப்பில் வெளியான தெறி மற்றும் அரவிந்சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கள் ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கெண்டார்.
இந்நிலையில் நடிகை மீனா 80s நடிகர்களின் கூட்டணியில் பங்கேற்ற புகைப்படங்களை நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து, So happy to see our 90s Meena joining 80s என குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |