இரு கிரகங்களின் சேர்க்கை.... மார்ச் மாதத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார் யார்னு தெரியுமா?
மார்ச் மாதத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இரு கிரகங்களின் சேர்க்கை
ஜோதிட ரீதியாக வரும் மார்ச் 15ம் தேதி சூரிய பகவான் மீன ராசிக்குள் பிரவேசிக்க இருக்கும் நிலையில், ஏற்கனவே செவ்வாய் கிரகம் மீன ராசியில் அமர்ந்திருப்பதால், இரண்டு கிரகங்களின் சேர்க்கையானது த்வித்வாதஷ் யோகம் என்ற தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
சூரியன் மற்றும் செவ்வாய் இரண்டு பலமான கிரகமும் இணைவதால், சில ராசியினர்களின் குணாதிசயங்களில் அதீத மாற்றங்கள் நிகழ்வதுடன், இவை சில தினங்கள் வரை நீடிக்கவும் செய்கின்றது.
இந்த நாட்கள் எந்தெந்த ராசியினருக்கு சவாலாக இருக்க போகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கன்னி
கன்னி ராசியினரு் இந்த காலத்தில் தங்களது பேச்சில் அதிக நிதானத்தினை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும், தேவையற்ற கோபத்தினை தவிர்ப்பதுடன், வார்த்தைகளையும் பயன்படுத்த வேண்டும். கணவன் மனைவி அல்லது பெற்றோருடன் வாக்குவாதம் அதிகமாக ஏற்படலாம்.

துலாம்
துலாம் ராசியினர்கள் நிதி ரீதியான சில்களையும், பண இழப்பினையும் சந்திக்கும் நிலை ஏற்படலாம். ஆதலால் யாரையும் எளிதாக நம்பிவிடக்கூடாது. நகை மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை பாதுகாப்பாக வைப்பது மிகவும் அவசியமாகும்.
மீனம்
மீன ராசியினருக்கு சூரியன் சொந்த ராசியாகிய இவர்களிடத்தில் நுழைவதால், தன்னம்பிக்கை சற்று குறைந்து, மன அழுத்தம், திடீர் தலைவலி, கண் பார்வை பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். மேலும் எந்தவொரு முக்கிய தொழில் முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்கவும். புதிய முதலீடு அல்லது வேலையில் பெரிய மாற்றத்தை செய்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவ்வாறு செய்வதால் எதிர்விளைவுகளை தடுக்குமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |