57 வயதிலும் தெறிக்கவிடும் அழகு... நடிகை நதியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகை நதியா தனது 56 வயதில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகை நதியா
1980ல் இளைஞர்களின் மனதில் கொடி கட்டி பறந்த நதியா தற்போதும் இளமையாகவே காணப்படுகின்றார். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வலம் வந்த இவருக்கு 1984ம் ஆண்டும் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
அதன் பின்பு தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இவர் பின்பு பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அன்புள்ள அப்பா படத்திற்கான சிறந்த நடிகையாக விருது பெற்ற இவர், 1988ம் ஆண்டு ஷிரிஷ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாடுகளில் தனது வாழ்க்கையை பயணித்தார்.
நதியா ரீ என்ட்ரி :
பின்பு 2007ம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பி வந்த நதியா, தாமிரபரணி, சண்டை, பட்டாளம் உள்ளிட்ட படங்களில் காட்சியளித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் ஒப்பந்தமாக தொடங்கிய இவர் சமீபத்தில் வெளியான ராம் போத்தினேனியின் தீ வாரியர் படத்தில் நாயகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார் நதியா.
தற்போது 57 வயதாகும் இளமை குறையாமல் இருக்கும் இவர் கடந்த அக்டோபர் 24ம் தேதி தனது 57வது பிறந்தநாளை தோழிகளுடன் கொண்டாடியுள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இவர் எடுத்த காணொளியினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |