முதல் மனைவியுடன் ஜாலியாக இமான்... சிவகார்த்திகேயன் சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் காணொளி
பிரபல இசையமைப்பாளர் டி இமான் தனது முதல் மனைவி மோனிகாவுடன் ஜாலியாக இருந்த முந்தைய காணொளி ஒன்று தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
டி இமான்
இசையமைப்பாளர் டி இமான் கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோனிகாவை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2020 நவம்பர் மாதம் விவாகரத்து செய்துள்ளார்.
பின்பு இரண்டாவதாக அமெலியா என்ற பெண்ணை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும் போது சிவகார்த்திகேயனை கோபமாக பேசினார்.
அதாவது நடிகர் சிவகார்த்திகேயனை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பாடகராகவும் அறிமுகப்படுத்தியவர் இமான் தான்.
இதைத் தொடர்ந்து ரஜினி முருகன், சீம ராஜா, நம்ம வீட்டு பிள்ளை, மனங்கொத்தி பறவை என்று பல படங்களுக்கு இசையமைத்து ஹிட்டான பாடலைக் கொடுத்ததுடன், சிவகார்த்திகேயனை தனது தம்பியாகவே நினைத்து வந்ததுடன், குடும்ப நண்பர்களாக இருவரும் இருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் இந்த ஜென்மத்தில் அவரை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறினார்.
இதன் பின்பு இமான் மற்றும் மோனிகா பிரிவதற்கு காரணமே சிவகார்த்திகேயன் என்று கூறப்பட்டு வருகின்றது. தற்போது இமான் தனது மனைவிக்கு தன்னுடைய பாடல் ஒன்றினை அற்பணித்து வெளியிட்ட காணொளி வைரலாகி வருகின்றது.
இருவரும் இணைந்து செம்ம ஹேப்பியாக பஞ்சுமிட்டாய் என்ற படத்திற்கு உருவாக்கிய மை பியூட்டிஃபுல் வைஃப் என்ற பாடலை பாடி தனது மனைவிக்கு டெடிகேட் செய்தும் உள்ளார்.
தற்போது இதனை அவதானித்த ரசிகர்கள் இவ்வளவு ஜாலியாக இருந்தவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குறித்த காணொளியும் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
எவ்ளோ சந்தோஷமா இருந்து இருக்கார்
— koodaltwitz (@koodaltwitz) October 25, 2023
மனுஷன் ? @immancomposer pic.twitter.com/4q7S4GC3Ep
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |