நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தை பகிர்ந்த 106 வயது மூதாட்டி! என்னன்னு தெரியுமா?
இங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியை சேர்ந்த எடித் ஹில் என்ற 106 வயது மூதாட்டி தனது நீண்ட ஆயுள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.
1919-ம் ஆண்டு மார்ச் 3-ஆம் திகதி பிறந்த இவர் தனது வாழ்க்கையில் இதுவரையில் இங்கிலாந்தில் 23 பிரதமர்கள் ஆட்சிக்கு வந்துள்ளதை கண்டுள்ளாராம்.
எடித் ஹில் பல அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்புபட்டு சமகாலத்தில் வாழ்ந்த ஒருவராவார். இவர் இரண்டு உலக போர்களையும் கடந்து வந்திருக்கிறார்.அத்தோடு 5 மன்னர்களின் ஆட்சியையும் கண்டுள்ளார்.
நீண்ட ஆயுள் ரசகசியம்
இவர் இனிப்புகளை விரும்பி சாப்பிடுகிறார். நிறைய சாக்லேட் சாப்பிடுவது, விருந்துகளுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவை தான் எனது நீண்ட ஆயுளுக்கும் மகிழ்ச்சியான வாழ்க்ககைக்கும் முக்கிய காரணம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எடித் ஹில், தான் ஒருபோதும் புகைபிடித்ததில்லை, அதிக அளவு மது அருந்தியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |