Chronic fatigue syndrome: நாள் முழுவதும் சோர்வாக உணர்கின்றீர்களா? இந்த நோய்குறியாக இருக்கலாம்
ஆங்கிலத்தில் Chronic fatigue syndrome என்றழைக்கப்படும் நாள்பட்ட சோர்வு நோய்க்குறி நிரந்தர மற்றும் நிலையான சோர்வுக்கு வழிவகுக்கிறது.
பெரும்பாலும் 30 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இந்த வகையான நோய்குறிகள் அதிகமாக அறியப்படுகின்றது.
சோர்வு என்படுவது, பெரும்பாலும் மோசமான ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு குறைவது மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது.
என்றாலும், சோர்வின் நிலையான உணர்வு உண்மையில் ஒரு நோய்க்குறியாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்பகள் எச்சரிகிக்கின்றனர்.
நாள்பட்ட சோர்வு நோய்க்குறியானது ஒரு சிக்கலான மற்றும் முடக்கும் நோயாக அறியப்படுகின்றது. இது மூளை மற்றும் தசைகள், செரிமானம், நோயெதிர்ப்பு மற்றும் இதய அமைப்புகள் உட்பட உடலின் பல பாகங்களை பாதிக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றது.
என்றாலும், உலக சுகாதார நிறுவனத்தால் இது ஒரு நரம்பியல் கோளாறு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
'மையால்ஜிக் என்செபலோமைலிடிஸ்' என்றால் தசைகளில் வலி, மூளை மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றில் ஏற்படும் அழற்சி.
ME/CFS உள்ளவர்களின் உடலில் ஏற்படும் சில உயிரியல் மாற்றங்களை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர், இருப்பினும் அதை எவ்வாறு தடுப்பது அல்லது குணப்படுத்துவது என்பது குறித்து இன்னும் முழுமையாக கண்டுப்பிடிக்கப்படவில்லை.
இந்த வகை சோர்வு உடல் மற்றும் மன செயல்பாடுகளை மிகவும் மோசமாக்கும். மேலும் ஓய்வெடுப்பதன் மூலம் நாள்பட்ட சோர்வு நோய்க்குறியை சமாளிப்பது கடினம்.
ஆனால் உடல் செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலமும் சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலமும் சிகிச்சையளிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
அறிகுறிகள் எப்படியிருக்கும்?
ME/CFS உள்ளவர்களிடம் வெளிப்படும் அறிகுறிகளானது நபருக்கு நபர் மாறுபடும், மேலும் அறிகுறிகளின் தீவிரம் நாளுக்கு நாள் மாறுபடும். இருப்பினும் சில பொதுவான அறிகுறிகளாக,
உடல் அல்லது மன பயிற்சிக்குப் பிறகு மிகுந்த சோர்வு.
நினைவகம் அல்லது சிந்திக்கும் திறன் கொண்ட பிரச்சனைகள்.
படுத்திருக்கும் போது, அமர்ந்த நிலையில் மற்றும் நிற்கும் போதும் கூட தலைச்சுற்றல் உணர்வு.
தசை அல்லது மூட்டு வலி.
புத்துணர்ச்சி தராத தூக்கம்.
இந்த நிலையில் உள்ள சிலருக்கு தலைவலி,
தொண்டை புண் மற்றும் கழுத்து அல்லது அக்குள்களில் மென்மையான நிணநீர் முனைகள் இருக்கும்.
இந்த நிலையில் உள்ளவர்கள் ஒளி, ஒலி, வாசனை, உணவு மற்றும் மருந்துகளுக்கு கூடுதல் உணர்திறன் உடையவர்களாக இருக்கின்றார்கள்.
இது ஒரு சிக்கலான கோளாறு ஆகும். மேலும் இந்த பிரச்சனை ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்கும் போது தீவிர சோர்வு நிலைக்கு வகைப்படுத்தப்படுகிறது.
ஏன் ஏற்படுகிறது?
அதற்கான காரணம் இன்னும் சரியாக அறியப்படவில்லை. சில காரணிகளின் கலவையானது இதில் தாக்கம் செலுத்துகின்றது.
ME/CFS சில குடும்பங்களில் இயங்குவதாகத் தோன்றுகிறது, எனவே சிலர் பிறக்கும்போதே இந்தக் கோளாறு உருவாகும் வாய்ப்பு அதிகம்.
சிலருக்கு வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு ME/CFS அறிகுறிகளை உருவாக்குகிறார்கள்.
சிலர் தங்கள் அறிகுறிகள் தொடங்குவதற்கு சற்று முன்பு காயம், அறுவை சிகிச்சை அல்லது குறிப்பிடத்தக்க உணர்ச்சி அழுத்தத்தை அனுபவித்ததாக தெரிவிக்கின்றனர்.
சிலருக்கு உடலின் எரிபொருளை, முதன்மையாக கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகளை ஆற்றலாக மாற்றுவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. இது போன்ற பல்வேறு காரணிகளின் கலவையால் நாள்பட்ட சோர்வு நோய்க்குறி ஏற்படலாம்.
எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?
நாள்ப்பட்ட சோர்வு அறிகுறியின் சிகிச்சையானது வாழ்க்கைமுறை மாற்றங்கள், மருந்துகள் மற்றும் அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை (CBT) ஆகியவற்றின் மூலம் அறிகுறிகளை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறது.
மேலும் உடற்பயிற்சி சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம். நீண்ட நாள்கள் சோர்வாக உணர்கின்றீர்கள் என்றால் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |