திருமணம் முடிந்த முதல் வாரத்திலேயே விபத்தை ஏற்படுத்திய இர்பானின் கார்: பெண் பலி
கடந்த வாரம் திருமணம் முடிந்த இர்பானின் கார் மோதியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
யூடியூபர் இர்பான்
தற்போது இருக்கும் நவீன தொழிநுட்பத்தால் பலரும் எதையாவது செய்து பிரபலமாகி விட்டார்கள். அப்படி பிரபலமானவர் தான் யூடியூபர் இர்பான்.
இவருக்கென்று பல ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரின் யூடியூப்பிற்கு 3.56 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர்.
உள்நாட்டில் ஆரம்பித்து வெளிநாடு வரை சென்று பல உணவுகளை சுவைத்து அது பற்றிய ஒரு ரிவீயூவைக் கொடுத்து வருகிறார். கடந்த வாரம் கூட இவரின் திருமணம் கோலாகமாக நடைபெற்றிருந்தது.
கார் விபத்து
மறைமலைநகர் என்ற பகுதியில் நேற்று இரவு பிரபல யூடியூபர் இர்பான் பென்ஸ் கார் மோதியதில் பத்மாவதி என்ற 55 வயதுடைய பெண் உயிர் இழந்துள்ளார்.
இர்பான் செல்கல்பட்டிலிருந்து சென்னைக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்த போதே அவரது பென்ஸ் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் பத்மாவதி.
குறித்த பெண் பொத்தேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், இர்பானின் காரை செலுத்திய அசாரூதின் எனும் ஓட்டுனர் தான் விபத்திற்கு காரணம் எனவும் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.