கோலாகலமாக நடந்த யூடியூபர் இர்பானின் திருமணம்: வாழ்த்து மழையில் நனைந்த தம்பதியினர்!
பிரபல யூடியூபர் இர்பானின் திருமணம் இன்று நடைபெற்றதையடுத்து அந்தப் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தை ஆட்கொண்டு வருகிறது.
யூடியூபர் இர்பான்
தற்போது இருக்கும் நவீன தொழிநுட்பத்தால் பலரும் எதையாவது செய்து பிரபலமாகி விட்டார்கள். அப்படி பிரபலமானவர் தான் யூடியூபர் இர்பான்.

இவருக்கென்று பல ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரின் யூடியூப்பிற்கு 3.56 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர். உள்நாட்டில் ஆரம்பித்து வெளிநாடு வரை சென்று பல உணவுகளை சுவைத்து அது பற்றிய ஒரு ரிவீயூவைக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், இன்று இர்பான் திருமணவாழ்வில் இணைந்து விட்டார். இவரின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இவருக்கு நடிகர் கமல்ஹாசன் உட்பட பல அரசியல் தலைவர்கள், செலிபிரிட்டிக்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
இர்பானுக்கு கடந்த ஆண்டு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமணத்தை நிறுத்தினார்.

அதன்பிறகு தான் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்வதில்லை என முடிவு செய்திருந்த இர்பான் இன்று திருமணம் செய்துக் கொண்டுள்ளமை அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
மேலும், இவரது திருமண வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் வைரலாகி வருகின்றது.






