நீண்ட நாட்களுக்கு உங்க ஸ்மார்ட்போன் ராக்கெட் வேகத்தில் வேலை செய்யனுமா?
ஸ்மார்ட்போன் நீண்ட நாட்களுக்கு அதிக வேகத்தில் வேலை செய்வதற்கு சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
இன்று மக்களின் கைகளில் ஸ்மார்ட் போன்கள் மிகவும் சாதாரணமாக இருக்கின்றது. அதாவது உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்ததாக ஸ்மார்ட்போன் இருக்கின்றது.
தற்போது புதிய வடிவமைப்புடன் பல புதிய ஸ்மார்ட் போன்கள் வெளியாகி வருகின்றது. ஒரு சிலர் ஸ்மார்ட்போன்களை அடிக்கடி மாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஸ்மார்ட்போன்கள் இரண்டு முதல் நான்கு ஆண்டு கால அளவில் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது. ஏனெனில் இதன் செயல்திறன் குறைந்துவிடுவதால் இவ்வாறு செய்ய வேண்டியுள்ளது.
நீண்ட நாட்களுக்கு வேகமாக செயல்பட வேண்டுமா?
உங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை, எலக்ட்ரானிக் மற்றும் காந்த புலன்களுடன் அதிகம் தொடர்பு கொள்ளாத வகையில் சிறிது விலக்கி வைக்கவும்.
நிறுவனம் அனுப்பும் அப்டேட்டுகளை அவ்வப்போது உங்கள் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்வது அவசியம். நிறுவனம் அனுப்பும் அப்டேட்டுகளில் புதிய அம்சங்கள் சேர்க்கப்படுவதால், தொலைபேசி முன்னே விட வேகமாகவும், ஸ்மூத்தாகவும் இயங்கும். ரேம் மற்றும் சேமிப்பகத்தில் பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்கும்.
ஸ்மார்ட் போன் சார்ஜ் செய்யும் போது இரவு முழுவதும் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். இதனால் பேட்டரி சேதம் அடைவதுடன், செல்போனின் செயல்திறனும் பாதிக்கப்படும்.
செல்போன் சார்ஜ் 100 சதவீதம் ஏற்றாமல் 90 சதவீதத்துடன் சார்ஜரை துண்டித்துவிடவும். அதே போன்று பேட்டரியின் சார்ஜ் 20 சதவீத்திற்கு கீழே குறையாமல் சார்ஜ் செய்வது நல்லது.
மேலும் சார்ஜ் செய்யும் மொபைல் போனுக்கு கொடுக்கப்பட்ட ஒரிஜினல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தவறான சார்ஜரைப் பயன்படுத்துவது பேட்டரியின் ஆயுளை பாதிக்கும் என்பதால் டூப்ளிகேட் சார்ஜரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |