இன்றுடன் நிறைவுபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களின் பட்டியலில் முதலிடம் எந்த நாட்டிற்கு?
ஜூலை 26-ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் இனிதே நிறைவு பெற்றன. இதில் தங்கப்தக்கங்கள் பெற்ற நாடுகளின் பட்டியலை பார்க்கலாம்.
ஒலிம்பிக் போட்டி
பாரிஸ் இல் கோலாகலமாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மூன்று நாடுகள் அதிக தங்கப்பதக்கங்களை பெற்று இடம்பிடித்துள்ளன.அத்துடன் இன்றிரவு 12.30 மணி அளவில் பிரமாண்டமான நிறைவு விழா நடைபெற உள்ளது.
33வது ஒலிம்பிக் பாரிஸில் கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இம்முறை ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங், சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தன. இந்தியாவில் இருந்து 16 வகையான விளையாட்டுகளில் 112 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
இதில் நேற்று வரை இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. ஆடவர் ஹாக்கியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
அந்த வகையில் இன்று 13 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நடைபெறுகிறது. இதில் மகளிருக்கான மராத்தான், ஆடவருக்கான வாலிபால், மகளிர் கூடைப்பந்து, மகளிர் வாலிபால், மகளிர் நவீன பென்டத்லான் மற்றும் ஆடவர், மகளிர் மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் பெற்று பதக்க பட்டியலில் 71 வது இடத்தில் உள்ளது.இதனை அடுத்து 39 தங்கப்பதக்கங்களை பெற்று சீனா முதலிடம் பிடித்துள்ளது.
38 தங்கப்பதக்கங்களை பெற்று அமெரிக்கா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதை தவிர அவுஸ்திரேலியா 18 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |