குட்டையான மனிதரை சந்தித்த உயர்ந்த மனிதர்.. ஆச்சர்யத்தை ஏற்படுத்திய காட்சி
உலகில் மிக உயரமான மனிதரும், உலகில் மிக குட்டையான மனிதரும் சந்தித்து கொண்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
துருக்கி நாட்டை சேர்ந்த சுல்தான் கோசென் என அழைக்கப்படும் 8 அடி, 3 அங்குல உயரம் கொண்ட மனிதர், கடந்த 2009 ஆம் ஆண்டு “ உலகில் மிக உயரமான மனிதர்” ஆக தெரிவுச் செய்யப்பட்டார்.
இதே போன்று நேபாளத்தைச் சேர்ந்த சந்திரா பகதூர் டாங்கி என அழைக்கப்படும் 251 சென்டிமீட்டர்கள், வெறும் 32 பவுண்டுகள் எடை கொண்ட மனிதர் “ உலகில் மிக குள்ளமான மனிதர் ” ஆக தெரிவு செய்யப்பட்டார்.
இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆம் லண்டனில் நடந்த நிகழ்வொன்றில் சந்தித்து கொண்டுள்ளனர்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சந்திரா பகதூர் டாங்கி
மேலும், குள்ளமான மனிதராக தெரிவு செய்யப்பட்ட டாங்கி அவரது 75 வயதில் இந்த உலகை விட்டு பிரிந்ததாக கூறப்படுகின்றது.
இவர் 30 வயதிற்கு மேல் உயிர் வாழ்வதே பெரிதாக கருதப்பட்ட நிலையில் இவர் 75 வயது வரை உயிர் வாழ்ந்துள்ளார் என்பது ஆச்சியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த கோசென் "அவர் குட்டையாக இருந்தாலும், நான் உயரமாக இருந்தாலும், எங்கள் வாழ்நாள் முழுவதும் பல போராட்டங்களை பார்த்திருக்கிறோம். டாங்கியின் கண்களை பார்க்கும் போதே தெரியும் அவர் ஒரு நல்ல மனிதர்..” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |