பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு திடீர் கல்யாணம்... இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்!
சீரியல் நடிகை மற்றும் குக் வித் கோமாளி புகழ், ரோஷினி ஹரிப்ரியனுக்கு திருமணம் முடிந்தது. குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த திருமணம் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றிருக்கிறது.
ரோஷினி ஹரிப்ரியன்
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ரசிகர்களின் பேராதரவுடன், வெற்றிகரமாக ஓடிய சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவரின் யதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த இல்லத்தரசிகள் மனங்களிலும் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.
பாரதி கண்ணம்மா சீரியலின் வெற்றியை தொடர்ந்து குக்வித் கோமாளியிலும் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின்னர், இவருக்கு வெள்ளித்திரையில் படங்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கருடன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின், மெட்ராஸ் மேட்னி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தலைவன் தலைவி படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில், நடிகை ரோஷினிக்கு சுந்தரமூர்த்தி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சின்னத்திரை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பாரதி கண்ணம்மா சீரியல் குடும்பமே இவர்களின் திருமணத்தில் ஒன்று கூடியியுள்ளது.

அந்த அது சீரியலில் வில்லியாக கலக்கிய ஃபரீனா, கண்ணம்மாவுக்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா அறிவுமணி, ஹீரோவாக நடித்த அருண் பிரசாத் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

அனைவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், திருமண வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |