உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் திறப்பு.. கின்னஸ் சாதனையில் இடம்!
துபாயில் அடுக்குமாடிக் கட்டடங்கள், நூலகம், மிகப்பெரிய தூண்கள் என அனைத்தையும் நீருக்கடியில் வடிவமைத்து, மிக பிரமாண்ட நீச்சல் குளத்தை கட்டி துபாயில் உலக சாதனையை படைத்துள்ளனர்.
மேலும், இவை 60 மீட்டர் ஆழத்துக்கு மிக பிரமாண்டமான நீச்சல் குளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த நீச்சல் குளம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
ஆழ்கடலுக்குள் நீச்சலுக்குச் செல்லும் நிபுணர்கள், இந்த நீச்சல் குளத்தில் புது வித அனுபவத்தைப் பெறுவதாகக் கூறுகின்றனர்.
நீந்தியபடியே சென்று, நீருக்குள் கட்டப்பட்ட கட்டடங்கள், நூலகத்தை பார்வையிட்டு ரசிக்கலாம்.
இதன்பின், ஒலிம்பிக் போட்டிக்கான நீச்சல் குளத்தை விட ஆறு மடங்கு பெரிய அளவில் இந்த நீச்சல் குளத்தை உருவாக்கியுள்ளனர்.