Water For Woman: ஆண்களை விட பெண்கள் அதிகம் தண்ணீர் பருக வேண்டும் ஏன்?
ஆரோக்கியமான வாழ்விற்கு தண்ணீர் மிக மிக இன்றியமையாதது, ஒரு நாளைக்கு குறைந்தது 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
நமது உடலானது 60 முதல் 70 சதவிகிதம் நீரால் ஆனது, தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் அருந்தவேண்டும் என்றில்லை.
வேலைக்கு நடுவே பணிச்சுமை காரணமாக பலரும் டீ, காபியை நாடுகின்றனர், ஆனால் அதற்கு பதிலாக தண்ணீர் அருந்துவது சிறப்பான பலனை கொடுக்கும்.
தண்ணீர் ஏன்?
உடலின் கழிவுகளை வெளியேற்றவும், செரிமானம் சீராக நடைபெறவும், உடல் உறுப்புகள் நன்றாக செயல்படவும் தண்ணீர் அவசியம்.
உடலை குளிர்ச்சியாக வைக்க, தசைகள் நன்கு இயங்க, மூளை சுறுசுறுப்புடன் செயல்பட, ரத்த ஓட்டம் சீராக இருக்க தண்ணீர் இன்றியமையாதது.
உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைத்து விட்டாலே, கல்லீரல் தன் பணியை திறம்பட செய்துவிடும், தேவையில்லாத கொழுப்புகள் சேராமல் தடுக்கவும் தண்ணீர் அவசியமாகிறது.
இவ்வாறு பல நற்பலன்களை கொண்டுள்ள தண்ணீரை ஆண்களை விட பெண்கள் அதிகளவு பருக வேண்டும் என கூறப்படுவது ஏன் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
பெண்களுக்கு...
குறிப்பாக கோடை காலங்களில் பெண்கள், குழந்தைகள் தண்ணீர் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுவது சிறுநீரக தொற்று தான், ஒவ்வொரு பெண்ணும் வாழ்நாளில் ஒருமுறையாவது சிறுநீரக தொற்றால் அவதிப்பட்டு இருப்பார்கள்.
நீர்க்கடுப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மர்ம உறுப்புகள் அரிப்பு, பூஞ்சைத் தொற்றுகள் என பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
வேலைக்கு செல்லும் பெண்கள், சிறுநீரை அடக்கி வைத்திருப்பது, வெளியே செல்லும்போது தண்ணீர் அருந்தாமல் இருப்பது, சுத்தமில்லாத கழிப்பறை உபயோகிப்பது என புறகாரணிகளும் இதற்கு காரணமாகிறது.
இதனால் சிறுநீரில் கலந்துள்ள கிருமிகள் அங்கேயே தங்கியிருந்து பிரச்சனைகளை உண்டு பண்ணுகின்றன.
சரியான நேரத்தில் தண்ணீர் அருந்தி, சரியான நேரத்தில் சிறுநீர் கழிப்பது அவசியம், சிறுநீரகத்தில் தொற்றுகள் இருந்தால் அதீத காய்ச்சல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிவயிற்றில் வலி ஏற்படலாம்.
இது இப்படியே தொடர்ந்தால் பித்தப்பையில் கல், சிறுநீரகத்தில் கல், கணையத்தில் கல் போன்றவை ஏற்படலாம்.
எனவே சிறுநீரக தொந்தரவுகள் இருக்கும் பெண்கள் வழமையை விட 1.5 லிட்டர் தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |