வெயில்கால சூட்டை தணிக்க சூப்பர் பானங்கள்! முன்னோர்களின் ஸ்பெஷல்
வெயில் காலத்தில் சூட்டை தணிக்க முன்னோர்கள் பருகிய பானங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெயில் காலம் வந்துவிட்டாலே ஏதாவது பானங்களை குடிப்பதற்கு தான் விரும்புவோம். இதற்காக கடைகளில் வாங்கி ப்ரிட்ஜில் அடிக்கியும் வைத்திருப்பார்கள்.
ஆனால் இவை நீர்ச்சத்தை குறைப்பதுடன் கலோரிகளையும் அதிகரிக்கும். மேலும் உடற்பிற்கு கெடுதலையும் கொடுக்கின்றது.
முன்னோர்கள் வெயில் சூட்டை சமாளிக்க பானகம் குடிப்பது வழக்கம். இந்த பானகம் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
பாரம்பரிய முறையில் பானகம்
தேவையான பொருள்கள்
புளி - எலுமிச்சை பழ அளவு,
வெல்லம் - 1 கப்,
சுக்குப்பொடி - கால் ஸ்பூன்,
ஏலக்காய் பொடி - கால் ஸ்பூன்,
தண்ணீர் - 5 டம்ளர்,
உப்பு - 1 சிட்டிகை,
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை,
எலுமிச்சை பழம் - பாதி,
செய்முறை
புளியை ஆற வைத்து நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் 5 டம்ளர் அளவு சுடுநீர் ஊற்றி அதில் வெல்லத்தை கரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் புளி கரைசலைச் சேர்த்து அத்துடன் ஏலக்காய் பொடி, சுக்கு பொடி, பச்சை கற்பூரம், ஒரு சிட்டிகை உப்பு இவற்றினை சேர்த்துக் கொள்ளவும்.
கடைசியாக எலுமிச்சை பழத்தை பிழிந்து சேர்த்தால், முன்னோர்களின் அருமையான பானம் தயார்.
வாட்டர் மெலன் - புதினா ஜூஸ்
தேவையான பொருள்கள்
வாட்டர்மெலன் துண்டுகள் - 1 கப்,
புதினா இலைகள் - 6,
உப்பு - 1 சிட்டிகை,
சர்க்கரை (அ) தேன் - சுவைக்கேற்ப,
ஊறவைத்த சப்ஜா விதை - 1 ஸ்பூன்
செய்முறை
தர்பூசணி பழத்தின் துண்டுகளில் விதைகளை நீக்கிவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அத்துதுடன் புதினா இலை சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
இதனுடன் ஒரு அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஜுஸாக அரைத்துக் கொள்ளவும். இதனை பெரியவர்கள் சர்க்கரை சேர்க்காமலும், சிறியவர்கள் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.
ஜுஸை டம்ளரில் ஊற்றி 4 புதினா இலைகள், சப்ஜா விதை மற்றும் ஐஸ் கட்டி சேர்த்து குடிக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |