மறந்தும் கூட வாங்கி சாப்பிடக்கூடாத 6 மீன்கள்: விஷத்தன்மை நிறைந்ததாம்
மீன்களை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையேனும் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அசைவம் சாப்பிடும் சிலருக்கு இறைச்சியை விட மீன் மிகவும் பிடிக்கும்.
மீன் ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் என்றாலும் சில வகை மீன்களை தவிர்ப்பது நல்லது.
சில மீன்களில் பாதரசம் உள்ளதால் இவற்றை சாப்பிடுவது முக்கியமான உடல்நலப் பிரச்சினைகள் உருவாக்கம்.
அந்தவகையில், மறந்தும் கூட சாப்பிடக்கூடாத 6 வகை மீன்கள் பற்றி விரிவாக காணலாம்.
தேளி மீன்
பெரிய அளவிலான தேளி மீன்களை வாங்குவதைத் தவிர்த்து சிறிய மீன்களை வாங்குங்கள். ஏனெனில் தேளி மீன்கள் வெவ்வேறு அளவுகளில் இருக்கும்.
மீனின் அளவை விரைவாக அதிகரிக்க, சில நேரங்களில் பல்வேறு ஹார்மோன்களை மீனின் உடலில் செலுத்துகிறார்கள். இது அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும்.
கானாங்கெளுத்தி மீன்
கானாங்கெளுத்தியில் பாதரசம் உள்ளது. கானாங்கெளுத்தி சாப்பிட்டால், அந்த பாதரசம் உங்கள் வயிற்றில் குவிந்து கொண்டே இருக்கும்.
இது பல்வேறு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே இனிமேல் கானாங்கெளுத்தியை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும்.
சூரை மீன்
சூரை மீனில் பாதரசம் அதிகமாக உள்ளது.
மேலும், இந்த மீன்களுக்கு அதிக அளவு ஹார்மோன்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செலுத்தப்படுகின்றன. இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு.
மத்தி மீன்
மத்தி மீன் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதேசமயம் அதிக பாதரசம் கொண்ட மீனும் இதுதான்.
அதிக பாதரசம் உடல் ஆரோக்கியத்தை எளிதில் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. எனவே இந்த மீனை அளவுக்கு அதிகமாக சாப்பிடவே கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கெளுத்தி மீன்
பொதுவாக பண்ணையில் வளர்க்கப்படும் மீன்களை சுவையை அதிகரிக்கவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் பல்வேறு இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அப்படி பயன்படுத்தப்படும் இரசாயணங்கள் மற்றும் பூச்சுக்கொல்லி மருந்துகள் புற்றுநோயை உண்டாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாஸா மீன்
அதிக அளவு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு நிறைந்து இந்த பாஸா மீன். கொலஸ்ட்ரால் ஆபத்து உள்ளவர்கள் இந்த மீனை சாப்பிடவே கூடாது.
அதேபோல் இதய நோய் மற்றும் அது தொடர்பான மற்ற நோய்களை ஏற்படுத்தும். மேலும், உங்களுக்கு ஆஸ்துமா அல்லது மூட்டுவலி இருந்தால்,பாஸா மீனை தொடக்கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |