பெண்கள் நெற்றியின் வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?
சுமங்கலிப் பெண்கள் வெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ள நிலையில், இதன் அறிவியல் காரணத்தையும் இங்கு தெரிந்து கொள்வோம்.
நெற்றி வகிட்டில் குங்குமம் எதற்காக?
குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் முன்னோர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதோசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தை கொடுக்குமாம்.
சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். நெற்றியின் மையப் பகுதியில் நமக்கு காந்தசக்தி அதிகமாக உள்ளது. குங்குமம் வைப்பதன் மூலமாக மற்றவர்கள் நம்மை வசியப்படுத்துவதிலிருந்து தப்பிக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |