நடுசாமத்தில் பசி தொந்தரவு செய்கிறதா? காரணங்களும் தீர்வும் இதோ!
பொதுவாக சிலர் 8 மணியாகும் பொழுது இரவு நேர சாப்பாட்டை முடித்து விடுவார்கள்.
அதன் பின்னர் வீட்டிலுள்ளவர்களுடன் பேசி விட்டு தூங்குவதற்கு 10 மணி கூட ஆகலாம். அப்படி தூங்கும் சமயத்தில் நம்முடைய வயிற்றில் ஒரு குட்டி பசி வருவது போன்ற உணர்வு தோன்றும்.
அப்போது உணவு சாப்பிடுபவர்களுக்கு நாளடைவில் எடை அதிகரிப்பு, செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இரவு தூங்க செல்லும்போது அல்லது நடுசாமத்தில் பசி வருகிறது என்றால் அந்த சமயத்தில் சாப்பிடலாமா? என்பதற்கான விளக்கத்தை தொடர்ந்து எமது பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

காரணம்
நள்ளிரவில் பசி வருவதற்கான முக்கிய காரணமாக நம்முடைய வளர்சிதை மாற்றம் பார்க்கப்படுகிறது. வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, கொஞ்சமாக இடம் வைத்திருந்தால் அதனை முழுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வருகிறது என்றால், அந்த சமயத்தில் சாப்பிடுவது ஆபத்து.
அந்த நேரத்தில் வரும் பசியால் உங்களுக்கு கை நடுக்கம் மற்றும் பதற்றம் போன்ற உணர்வு இருந்தால் உரிய மருத்துவரை பார்ப்பது சிறந்தது.

பசியால் வரும் ஆபத்து
இரவில் மீண்டும் பசி வருகிறது அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருப்பவர்கள் சாப்பிடும் பொழுது, கலோரியின் அளவு சற்று குறையும். அதே சமயம், உங்களுடைய உடம்பில் உள்ள இன்சுலின் அளவு குறையும், இது உடம்பில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

சரிச் செய்யும் வழிமுறைகள்
1. எந்தவித காரணமும் இல்லாமல் நடுசாமத்தில் பசி வருகிறது என்றால் அது என்ன காரணத்திற்காக வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
2. நம்மிள் சிலருக்கு சில உணவுகளை பார்த்தவுடன் வெறுப்பு வருகிறது என்றால் அவர்கள் வயிற்றை நிறைப்பதற்காக சாப்பிடுவார்கள். இது மிகப் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. உப்பு அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு சில சமயங்களில் நள்ளிரவில் பசி எடுக்கலாம்.

3. உணவுமுறையை திட்டம் ஒன்று வைத்துக் கொள்ளதவர்களுக்கு நள்ளிரவில் பசி வரலாம். நீங்கள் எப்போதும் சரியான உணவு திட்டமிடலை வைத்து கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் சமயத்தில் நள்ளிரவில் வரும் பசியை கட்டுப்படுத்தலாம்.
4. உணவுத்திட்டத்தின் படி, எவ்வளவு ஊட்டச்சத்துக்களை எந்த சமயத்தில் எடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. அதனை முறையாக பின்பற்ற வேண்டும். இரவு நேரங்களில் செரிமானத்தை இலகுப்படுத்தும் வகையில் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

5. உங்களுடைய மனம் குழப்பத்தில் இருக்கும் சமயத்தில் பசி வருவது போன்று உணர்வு தோன்றலாம். அப்போது சிறந்த மனநல மருத்துவரை பார்க்க வேண்டும். பசிக்கும் நேரத்தில் எல்லாம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |