அர்ச்சனா வெற்றிக்கு பிராவோ கொடுத்த பரிசு தான் காரணமா?
பிக் பாஸ் அர்ச்சனாவின் வெற்றிக்கு பிராவோ கொடுத்த ஜபமாலை பிரேஸ்லெட் தான் காரணம் என்ற தகவல் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் அர்ச்சனா
பிரபல ரிவியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7ல் அர்ச்சனா டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.
பிக் பாஸ் வரலாற்றிலேயே இவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாராம். மேலும் எந்தவொரு வைல்டு கார்டு போட்டியாளரும் வெற்றி பெற்றதில்லை.
ஆனால் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற போட்டியாளரில் ஒருவர் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
பிராவோ கொடுத்த பரிசு
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் தைரியம் இல்லாமல் அழுது கொண்டிருந்த அர்ச்சனாவிற்கு, பிராவோ வெளியே செல்லும் தனது கையில் வைத்திருந்த ஜபமாலை கைசெயினை பரிசாக கொடுத்து சென்றார்.
இதனால் அர்ச்சனாவிற்கு ஒரு நேர்மறையான எனர்ஜி வந்த நிலையில், தனி ஆளாக புல்லிங் கேங்கை விளாசி எடுத்தார். இந்த ரகசியம் பலருக்கும் தெரியாமல் தான் இருந்தது.
கடைசி வாரத்தில் உள்ளே வந்த பிராவோ ரகசியத்தை உடைத்தார். 'தான் தந்த மாலை பத்துமலை முருகன் கோயிலில் வாங்கியது அல்ல. ஆனால் அது உன் தைரியத்தை எப்படி உயர்த்தியது பார்த்தாயா' என்று கேட்டார்.
அவரின் திறமையான ஆட்டம்தான் வெற்றிக்குக் காரணமென்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. இதுபோன்ற சிறு விஷயங்களால் கிடைக்கும் பாசிட்டிவிட்டி பல நேரங்களில் நமக்கு உதவியாக இருந்திருக்கும்.
அர்ச்சனா உண்மையிலேயே அதை நம்பினார். நம்பிக்கையை ஊன்றுகோலாகக் கொண்டு தைரியமாக எதிர்கொண்டார். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ அங்கே இறைவனின் அருளும் இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
பலரும் அர்ச்சனாவை போன்று சோர்ந்து போகும் வேலையில் நிச்சயம் சிறு நம்பிக்கையும், ஒரு பாசிட்டிவிட்டியும் தேவைப்படுகின்றது. அதை கொடுப்பது நம்பிக்கை... மற்றும் நமது ஆன்மீக நம்பிக்கையே என்பதை அர்ச்சனா உணர்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |