விபத்தில் சிக்கிய மணமகள்- யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த திருமணம்
விபத்தில் சிக்கிய பெண்ணை மணமகளாக்கிய இளைஞரின் செயல் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
திருமணம்
பொதுவாக பல வருடங்களாக காதலித்து வருபவர்கள் சில அசம்பாவிதமான சம்பவங்கள் காரணமாக கடைசியில் ஒன்று சேர முடியாமல் போய் விடும்.
இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கடைசி வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பார்கள். சிலர், தன்னுடைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடுவார்கள்.
திருமணம் நடக்கும் சமயத்தில் கூட நடக்கும் சில மோசமான சம்பவங்கள் அந்த திருமணத்தையே நிறுத்தி விடுகிறது.

அந்த வகையில், கேரளாவை சேர்ந்த 25 வயதுடைய ஆவணி என்ற பெண்ணொருவர் ஷாரோன் 32 வயது என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் இருந்தது. அப்போது மணமகள் ஒப்பனை செய்வதற்கான காரில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது யாரும் எதிர்பார்க்காத வகையில், மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த பெண் சிறு சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவசர திருமணம்
இந்த நிலையில், வருங்கால மனைவிக்கு விபத்து நடந்த காரணத்தினால் மனம் உடைந்து போன மாப்பிள்ளை மருத்துவமனையில் வைத்து தாலிக் கட்டியுள்ளார்.

இந்த திருமணம் செய்தி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது. “இப்படியொரு காதலா?“ என அதிர்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |