வாசிங் மெசினில் பாத்திரங்கள் கழுவும் இளம்பெண்! ஷாக்கில் உறைந்த இன்ஸ்டாகிராம் பயனர்கள்
வாசிங் மெசினில் பாத்திரங்களை போட்டு சுற்ற விடும் இளம்பெண்ணின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வொசிங் மெசினில் பாத்திரம் கழுவும் வீடியோ
பொதுவான தற்போது இருக்கும் சமூக வலைத்தளங்களை திறந்து பார்த்தால் வேடிக்கையான பல வீடியோக்கள் குவிந்து கிடக்கும். இது போல் வீடியோக்களை பார்க்கும் போது நமது வாழ்க்கையில் நடந்த சில அனுபவ சம்பவங்கள் ஞாபகத்திற்கு வரும்.
அந்த வகையில் இளம் பெண்ணொருவர் செல்போனை பார்த்து கொண்டு ஆடைகளை துவைக்கும் வாசிங் மெசினில் பாத்திரங்களை போட்டு அதற்கு தண்ணீரை ஊற்றுகிறார்.
பின்னர் அதில் விம் ஜெல்லையும் ஊற்றி மெசினை ஓன் செய்து விடுகிறார். இதனை தொடர்ந்து அந்த வாசிங் மெசினும் சுற்றுகிறது.
இதனை பார்த்த இணையவாசிகள் இது என்னடா புதுசா இருக்கு என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.