கின்னஸ் உலக சாதனை: தாய்ப்பால் கொடுத்து சாதித்த பெண்- எதனால் இந்த முடிவு?
தாய்ப்பாலை நன்கொடையாக கொடுத்து சாதித்த பெண் பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கின்னஸ் சாதனை
அமெரிக்காவை சேர்ந்த அலைஸ் ஓகிள்ட்ரீ (Alyse Ogletree) என்ற பெண்ணொருவர் தன்னுடைய முதல் குழந்தை பிறந்த பின்னர், தாய்ப்பால் இல்லாமல் பசியால் வாடும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
இந்த முயற்சியால் கடந்த 2023 ஆம் ஆண்டு 2,645.58 லிட்டர் தாய்ப்பால் நன்கொடையாக வழங்கி சாதனையாளராக மாறியுள்ளார்.
அதற்கு முன்னர் கடந்த 2014ஆம் ஆண்டு 1,569.79 லிட்டர் தாய்ப்பால் கொடுத்துள்ளார். இதனால் 350,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
மேலும், டெக்ஸாஸைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயான இவர், தன்னுடைய முதல் குழந்தை பிறந்த பின்னர் தான் நன்கொடை வழங்க ஆரம்பித்திருக்கிறார்.
இது போன்று தாய்ப்பால் நன்கொடை கொடுத்து பிரபலமான பெண்கள் பற்றி கீழுள்ள காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |