கனவுகள் தோன்ற ஆன்மீக காரணம் என்ன? இப்படி கண்டால் அதிர்ஷ்டம் உறுதி!
பொதுவாகவே தூக்கத்தின் போது கனவு வருவது மிகவும் இயல்பான விடயம் என்றாலும் இது அவ்வாறு நிகழ்கின்றது என்பது இன்றளவும் அறிவியலுக்கே சவால்விடும் ஒரு விடயமாகத்ததான் இருந்து வருகின்றது.
இருப்பினும் உளவியல் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கூற்றுகளின் பிரகாரம், மூளையானது பழைய மற்றும் நிகழ்கால நினைவுகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக கனவுகள் தோன்றுவதாக குறிபப்பிடப்படுகின்றது.
ஆன்மீக காரணம்
ஆனால் இந்து மதத்தின் கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில் நமக்கு தோன்றும் கனவுகளுக்கும் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்தவையில் கனவுகள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சாதக மற்றும் பதாக விடயங்களை முன்கூட்டியே அறியதரும் ஒரு எச்சரிக்கை மணி போன்றது என குறிப்பிடப்படுகின்றது.
அதற்காக நமக்கு தோன்றும் கனவுகள் அப்படியே எதிர்காலத்தில் நடக்கும் என்று அர்த்தம் கிடையாது. அதற்காக பலக்கள் மட்டுமே நடக்கும்.
அடிப்படி உறக்கத்தில் தோன்றும் கனவுகளில் எவ்வாறான கனவுகள் அதிர்ஷ்டத்தை குறிக்கின்றது என்பது குறித்த விரிவாக விளக்கத்தை இந்த பதிவில பார்க்கலாம்.
அதிர்ஷ்டம் தரும் கனவுகள்
கனவு சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம், கனவில் பச்சை நிறத்திலான நீர் நிலைகளை கண்டால், வாழ்வில் மிகப்பெரும் மாற்றம் மற்றும் செழிப்பு ஏற்படப்போகின்றது என்று அர்த்தம்.
பொதுவாகவே பச்நை நிறம் செழிப்பு மற்றும் அதிஷ்டத்தின் அடையாளமாக அறியப்படுகின்றது. அதே போல் நீர் நிலைகள் அமைதி மற்றும் மகிழ்சியின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. எனவே பச்சை நிறத்திலான குளம் அல்லது ஆறுகளை கனிவில் காண்பது எதிர்காலத்தில் செல்வ செழிப்பை கொடுக்கும்.
ஏதாவது ஒரு பொருளின் குவியலை கனவில் காண்பதும் வளம், ஆற்றல், பாதுகாப்பை குறிக்கும் அறிகுறியாகும். பல பொருட்கள் நிறைய குவிந்து இருப்பது போல் கனவு வந்தால் மிகப்பெரும் அதிர்ஷ்ட யோகம் கிடைக்கப் போகின்றது என்று அர்த்தம்.
கனவில் பூக்கள் தோன்றுகின்றது என்றால், வாழ்க்கை மிகவும் இனிமையானதாக மாற போகின்றது என்று அர்த்தம். பூக்களை கனவில் காண்பது பணம் உட்பட சகல செல்வங்களின் வரவையும் குறிக்கின்றது. இது நிச்சயம் மிகப்பெரும் வாழ்ககை மாற்றத்தை கொடுக்கும்.
அதுபோல் கனவில் வெள்ளை நாகம் தோன்றினாலும் மிகப்பெரும் அதிர்ஷ்டம் உங்களை நோக்கி வரபோகின்றது என்பதையே குறிக்கின்றது.
கனவில் கடவுள் உருவங்கள் அல்லது மத குருக்களை காணப்பதும் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும்.இது உங்கள் வாழ்க்கை சரியான பாதையில் செல்கின்றது என்பதன் அறிகுறியாகவும் பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |