குடும்பமே தீயில் கருகி பலியான நேரத்தில்... மணமேடையில் மணமகள்! நெஞ்சை உருக்கும் சோகம்
திருமணம் என்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் மறக்க முடியாத ஒரு சுப நிகழ்வு இதில் எவ்வித குழப்பமும் இல்லாமல் சுபமாக நிறைவேற வேண்டும் என்பதே அவளின் பெரிய கனவாக இருக்கும்.
அவ்வாறான திருமணத்தில் தன் மொத்தக் குடும்பத்தையும் பறிகொடுத்து விட்டு அந்த நொடியிலேயே திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தீயில் கருகிய குடும்பம்
இந்தியாவில், ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் ஆஷிர்வாத் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர். அதே நேரம் அந்த குடியிருப்பில் வசித்து வந்த சுவாதி என்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெறவிருந்தது.
சுவாதி தன் குடும்பத்தினருடன் ஜோராபடக்கில் உள்ள ஆஷிர்வாட் கோபுரத்தின் நான்காவது மாடியில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்தக் குடியிருப்பிலேயே செவ்வாய்க்கிழமை தீவிபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் சுவாதி குடும்பம் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் சுவாதியின் குடும்பத்தில் தாயார் மற்றும் அவரது தாத்தா பாட்டி மற்றும் சகோதரன் உட்பட 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
சோகத்தை மறைந்து திருமணம்
இந்நிலையில், திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த சுவாதி மாலை 4 மணியளவில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தி விநாயக் ரிசார்ட் திருமண அரங்கிற்கு ஸ்வாதி வீட்டிலிருந்து புறப்பட்டார்.
அவரது தந்தை சுபோத் லால், அவரது தாயார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் இன்னும் பிளாட்டில் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
இங்கு திருமணம மேடையில் தயாராகிக் கொண்டிருந்த சுவாதி தனது தாய் மற்றும் தாத்தா பாட்டியைப் பற்றி தொடர்ந்து கேட்டபோதும் அப்போதும் அவரிடம் எதுவும் சொல்லாமல் திருமண சடங்குகள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தன.
இதன்போது, பின்னர், தீயிலிருந்து தப்பிய அவரது தந்தை மட்டும் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் அவர் அதிர்ச்சியில் இருந்ததால், அவரால் சடங்குகளில் பங்கேற்க முடியவில்லை. வேறு சில குடும்ப உறுப்பினர்கள் சடங்குகளை முடித்தனர்.
திருமணம் முடிந்த பிறகு நடந்த விடயங்களை மணப்பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட சுவாதி மனமுடைந்து சோகத்தில் சூழ்ந்து விட்டார்.
இந்த செய்தி பார்த்தவர்களை மட்டுமல்ல கேட்பவர்களையும் பெரும் சோகத்திற்குள் ஆழ்த்தியுள்ளது.