மாலை மாற்ற முன்பு மணப்பெண்ணிடம் முத்தம் கேட்ட மணமகன்! வெட்கத்தில் அரங்கேறிய சம்பவம்... வைரலாகும் காட்சி
திருமணத்திற்கு முன்னர் மாலையிடுவதற்கு மணமகன் மணமகளிடம் முத்தத்தை கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கடைசியில் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க மணமகன் முத்தம் கேட்டது தெரியவந்தது.
பழங்காலங்களில் திருமணங்கள் சண்டை சச்சரவு கண்ணீருடன் முடியும் என்பார்கள். ஆனால் இந்த காலத்தில் இளம் தலைமுறையினர் வரதட்சிணைக்காக எந்த சண்டையையும் போடாமல் விட்டு கொடுத்து போவதால் திருமணங்கள் சுமுகமாகின்றன.
இந்த சுமூகம் ஒரு சிலருக்கு திருமணத்திற்கு பிறகு பிரச்சினைகளை கொடுக்கும். ஒரு சிலருக்கு திருமணத்திற்கு பிறகும் ஸ்மூத்தாக செல்லும். வடமாநிலங்களில் மூன்று நாட்கள் மெஹந்தி விழா, மாப்பிள்ளை ஊர்வலம் என பல சடங்குகள் நடத்தப்படுகின்றன.
இந்த திருமணங்களில் அவரவர் வழக்கப்படி விளையாட்டுகளும் நிறைந்திருக்கும். அந்த வகையில் ஒரு திருமணத்தில் மணமகன் ஒருவர் செய்த சேட்டை வீடியோ வைரலாகி வருகிறது. வடமாநிலத்தவரின் திருமணம் ஒன்றில் மணமகன் மற்று்ம மணமகள் ஆகிய இருவரும் மாலை மாற்றி கொள்ளும் சடங்கு நடைபெறுகிறது.
இந்த சடங்கின் போது அந்த மணமகள் மணமகனுக்கு மாலையை அணிவிக்கிறார். இதையடுத்து மணமகனிடம் இருந்து மாலையை பெற்று கொள்ள மணமகள் முற்படும் போது திடீரென மணமகன் மாலையை அணிவிக்க மாட்டேன் என்கிறார். இது புரியாமல் மணமகள் சில நொடிகள் விழிக்க, உடனே முத்தம் கொடுத்தால் மாலை அணிவிக்கிறேன் என்கிறார்.
இதனால் மணப்பெண் வெட்கத்தில் தலை குனிய , கன்னங்கள் சிவக்கின்றன. அங்கிருக்கும் சொந்தபந்தங்கள் எல்லாம் ஆரவாரம் செய்கிறார்கள். உடனே அந்த பெண்ணும் மணமகனின் கன்னத்தில் முத்தமிடுகிறார். பின்னர் மாலையை பெற்றுக் கொள்கிறார்.
அந்த மணமகன் பெயர் அபிஷேக் சர்மா, மணமகள் பெயர் அன்மோல் ஷெராவத். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்களாம். பின்னர் அவர்களுக்குள் காதலாகி திருமணம் வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.