சிலிண்டர் இல்லாமல் உணவு சமைக்கனுமா? சில நொடியில் இந்த உணவை செய்திடுவீ்ஙக
இன்றைய காலத்தில் அடுப்பு மற்றும் எண்ணெய் இல்லாமல் உணவு சமைப்பது என்பது பெரும் சவாலாக இருக்கும் நிலையில், அடுப்பில்லாமல் சமைக்கும் உணவில் ஒன்றை இங்கு தெரிந்து கொள்வோம்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் ஹோட்டல், வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாறு தட்டுப்பாடு எழுந்துள்ளது.
இந்நிலையில் எரிவாயு இல்லாமல் உணவுகளை சமைப்பது என்பது பெரும் சவாலான ஒன்றாக இருக்கின்றது. அந்த வகையில் கேஸ் இல்லாமல் தயாரிக்கப்படும் அவல் தயிர் சாதத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
புளிக்காத தயிர் 1 கப்
வெள்ளை அவில் 1 கப்
பச்சை மிளகாய் 1
இஞ்சி - சிறு துண்டு
கேரட் துருவல் - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - கொஞ்சமாக
மாதுளம்பழம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கருப்பு திராட்சை - சிறிதளவு

செய்முறை
இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் இவற்றினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அவலை தண்ணீரில் அலசி தண்ணீர் இல்லாமல் பிழிந்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக, இதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை, கேரட் துருவல், கருப்பு திராட்சை, மாதுளம் பழ முத்துகள், தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
நொடிகளில், அடுப்பே இல்லாமல் தயிர் சாதம் தயாராகிவிடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |