viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்தை அசால்ட்டாக வெறும் கையில் தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது?
நபரொருவர் படமெடுத்து நின்ற ராஜ நாகத்தை அசால்ட்டாக வெறும் கையில் தூக்கிய பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மனிதர்களை அச்சுறுத்தும் பல விலங்குகள் இருந்தாலும் ,மக்கள் அதிகம் அச்சம் கொள்வது பாம்புகளை பற்றி தான். ஏனென்றால் பாம்பு கடியால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.
குறிப்பாக ராஜ நாகம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாம்பாக அறியப்படுகின்றது.
அளவில் பெரியதான ராஜ நாகம், மிகவும் புத்திசாலித்தனமான பாம்பாக கருதப்படுகிறது. இதன் விஷம் மிகவும் ஆபத்தானது.
இது யானையைக் கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் ராஜநாகம் பாம்புகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.
இவ்வளவு கொடிய விஷம் கொண்ட ராஜ நாகத்தை கொஞ்சமும் பயமின்றி நபரொருவர் அசால்ட்டாக தூக்கிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |