viral video: சேட்டை செய்த நபரை விரட்டி விரட்டி கடித்த பாம்பு... பதரவைக்கும் காட்சி
நபரொருவர் அமைதியாக சென்ற தண்ணீர் பாம்பிடம் சேட்டை செய்ததால் சினம் கொண்ட தண்ணீர் பாம்பு அந்த நபரை விரட் விரட்டி கடித்த பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரவாகி வருகின்றது.
பொதுவாக Diamondbacked நீர்ப்பாம்புகளின் மொத்த நீளம் சுமார் 30-60 அங்குலங்கள் வரையில் (76-152 செ.மீ) இருக்கும்.
இந்த தடிமனான உடல் கொண்ட பாம்புகள் வெளிர் சாம்பல்-பழுப்பு நிறத்தில் முழு உடலிலும் அடர் சங்கிலி போன்ற வடிவத்துடன் இருக்கும்.
இந்த வகை நீர்ப்பாம்புகள் மனிதர்களுக்கோ அல்லது செல்லப்பிராணிகளுக்கோ ஆபத்தானவை கிடையாது, ஆனால் அவை தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் எதிரியை பயமுறுத்தவும் உடனடியாகக் கடிக்கும் இயல்பை கொண்டுள்ளது.
இருப்பினும் இந்த பாம்புகள் விஷ தன்மை அற்றது. இந்த பாம்புகள் ஆக்ரோஷமானவை அல்ல, மேலும் மக்கள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் நேரடி தொடர்பைத் தவிர்க்க விரும்புகின்றது.
இந்த வகை தண்ணீர் பாம்பு தன்னை அச்சுறுத்திய நபரை ஆக்குரோஷமாக தாக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |