வயிற்றுத் தொப்பையால் குனிய கூட முடியாமல் தவிக்கிறீர்களா? இரவில் இந்த பானங்களை குடித்து பாருங்க!
பொதுவாகவே இப்போதுள்ளவர்களுக்கு உடல் எடையைக் குறைப்பது பெரும் போராட்டமாகவே இருக்கும். இவ்வாறு அதிகரித்துக் கொண்டு போகும் தொப்பையால் பலரும் பல கேலி கிண்டல்களையும் சந்தித்து வருவார்கள்.
ஒரு சிலர் உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வார்கள் ஆனால், உடல் எடை குறைந்த பாடாக இருக்காது. உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருவார்கள். சிலருக்கு உடல் எடையை குறைக்க நேரம் இல்லாமல் இருக்கும்.
இரவில் குடிக்க வேண்டிய பானம்
தொப்பையை குறைக்க சிறந்த மசாலாப் பொருளான மஞ்சள் பெரும் பங்கு வகிக்கிறது. அதே போல பாலிலும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கிறது. அப்படி இரவில் பாலில் மஞ்சள் பொடியை சேர்த்துக் குடித்தால் தொப்பை குறையும்.
உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிப்பது வெந்தயம். வெந்தயமானது உச்சி முதல் பாதம் வரை ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சிறந்த மருந்தாகும்.
அந்தவகையில் 1 தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்து வடிகட்டி இரவில் கொஞ்சமாக சூடு செய்து குடித்தால் தொப்பையுடன் உடல் எடை குறைக்கும்.