கொட்டிய முடிகளை மீண்டும் வளர வைக்கும் நட்ஸ்கள்: தினமும் இப்படி சாப்பிட்டால் நல்ல தீர்வு
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இந்தப் பிரச்சினைகளுக்கு எவ்வித மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாமல், எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம்.
அந்தவகையில் தற்போது உங்கள் முடி உதிர்வுக்கு சிறந்த தீர்வினை இங்கே பார்க்கலாம்.
முடி பிரச்சினைகளை போக்கும் நட்ஸ்கள்
நட்ஸ்களில் கால்சியம், இரும்பு, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் என்பன அதிகம் காணப்படுகிறது.
இதில் முடி வளர்ச்சிக்கு துத்தநாகம், செலினியம் மிகவும் முக்கியமானது அவை நட்ஸ்களில் அதிகம் இருப்பதால் நட்ஸ்களை நீங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் ஊறவைத்த பாதமை இரவில் சாப்பிட்டு வந்தால் முடியின் வேர்கள் சேதமடையாமல் வளரும். ஏனெனில் முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமான பி வைட்டமின்கள் பாதாமில் அதிகம் இருக்கிறது அதனால் தினமும் 15 இலிருந்து 20 பாதாம் வரை சாப்பிடலாம்.
ஹேசல்நட்ஸ்களில் அதிகமாக வைட்டமின் ஈ காணப்படுகிறது. இது முடியின் வேர்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது. மேலும், இது தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாத்து முடிவளர்ச்சியை அதிகரிக்கிறது அதனால் தினமும் 25 இலிருந்து 30 கிராம் வரைக்கும் சாப்பிடலாம்.
முந்திரியிலும் முடிவளர்ச்சிக்குத் தேவையான புரதமும் துத்தநாகமும் அதிகம் இருக்கிறது. அதனால் தினமும் 5 இலிருந்து 10 முந்திரிகள் எடுத்துக் கொண்டால் உடி உதிர்வு இல்லாமல் அடர்த்தியாக வளரும்.
பிரேசில் நட்ஸ்களும் முடி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்குகிறது. இது முடியின் வேர்களை சேதமடையாமல் பாதுகாத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதனால் தினமும் 2 முதல் 3 பிரேசில் நட்ஸ்களை சாப்பிடலாம்.
அக்ரூட் பருப்பில் ஒமேகா 3 மற்றும் கொழுப்பு அமிலங்களின் மூலம். மேலும், இதில் வைட்டமின், செலினியம் அதிகமாக இருப்பதால் இது முடி உதிர்வை மேம்படுத்த உதவுகிறது அதனால் தினமும் 6 முதல் 8 சிறிய அக்ரூட் பருப்புகளை சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |