பாதாமை அதிகம் எடுத்துக் கொள்வதால் இவ்வளவு பிரச்சினையா?
நம்மில் பெரும்பாலான நபர்கள் உடலின் எடையை அதிகரிக்க பாதாம் பருப்பை எடுத்துக் கொள்வது உண்டு.
இந்த பாதாம் பருப்பினுள் அதிகமான புரதம் மற்றும் புரோட்டின் சத்துக்கள் உள்ளதுடன் இதனை சிறுநீ்ரக நோய் உள்ளவர்கள் சாப்பிடுவது உடலுக்கு நன்மையை தரும்.
இதில் பல அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். இருப்பினும் இதனை ஒரு சிலர் எடுத்து கொள்வது நல்லதல்ல.
பாதாம் பருப்பை யாரெல்லாம் எடுக்க கூடாது?
பாதாம் பருப்பில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு நல்லது. அதே நேரத்தில், பாதாம் அளவுக்கு அதிகமாக உட்கொண்ட பிறகு செரிமான பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன.
பாதாமில் அதிக அளவு விட்டமின் E காணப்படுகிறது, இதன் காரணமாக அதிகமான அளவில் தலைவலி, உடற்சோர்வு மற்றும் சோர்வு உண்டாகும்.
உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளவதன் மூலம் சமிப்பாட்டுடன் கூடிய மலச்சிக்கல் மற்றும் ஆஜீரண பிரச்சினைகள் எற்படும்
இதில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் உடல் எடை மிக வேகமாக அதிகரிக்கும். மற்றும் இந்த பாதாம் பருப்பில் மக்னீசியம் காணப்படுக்கின்றமையால் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள் பாதாம் பருப்புகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது மூச்சுத் திணறல் போன்ற அபாயத்தை அதிகரிக்கிறது.
வயிற்றுக் கோளாறுகள் :
அதிகப் படியான பாதாம் நாம் எடுத்துக் கொள்ளும் போது அது செரிமானம் அடைய அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும்.
அதோடு பிற உணவுகளையும் செரிமானம் ஆவதை தடுக்கும். இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற தொல்லைகள் ஏற்படக் கூடும்.
நார்ச்சத்து அதிகமிருக்கக்கூடிய எந்த பொருளை நீங்கள் உணவாக எடுத்துக் கொண்டாலும் அது செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.
அதற்கு அதிகப் படியான தண்ணீர் தேவை. பாதாமை செரிக்க வைக்க தண்ணீர் குடிக்கிறேன் என்று சொல்லி வழக்கத்தினை விட அதிகளவு தண்ணீர் குடித்தால் உங்கள் உடலில் சோடியம் அளவு குறைவதால் மேலும் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
மக்னீசியம்
நீங்கள் அன்றைக்கு எடுத்துக் கொள்ளக் கூடிய உணவிலும் மக்னீசியம் இருக்கிறது.
இதைத் தவிர வழக்கம் போல அளவுக்கு அதிகமாக பாதாம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று சொன்னால் நம் உடலில் கூடுதலான மக்னீசியம் சேர்ந்திடும். ஏனெனில் பாதாமில் மக்னீசியம் இருக்கிறது.
இது ரத்த அழுத்தம் உட்பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். ஒரு நாளைக்கு உங்களுக்கு 1.3 முதல் 2.3 மில்லி கிராம் வரையிலான மக்னீசியம் போதுமானது.
விட்டமின் இ
ஒரு நாளில் நமக்கு 15மில்லி கிராம் வரையிலான விட்டமின் இ போதுமானது.
பாதாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவ தால் விட்டமின் இ நம் உடலில் 1000 மில்லி கிராம் வரையிலும் அதிகரித்து விடும்.
இதனால் வயிற்றுப் போக்கு, தலைவலி, உடற்சோர்வு ஆகியவை ஏற்படும்.
உடல் எடை
பாதாம் அதிகளவு சாப்பிடுவதால் ஏற்படுகிற பின் விளைவுகளில் மிகவும் முக்கியமானது இது தான். ஆம், அளவு தெரியாமல் அதிகளவு பாதாம் எடுத்துக் கொள்வதால் அது நம் உடல் எடையை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
பாதாமில் கொழுப்பு இருக்கிறது. ஏற்கனவே கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது கூடவே பாதாமும் என்றால் உடல் எடை மிக வேகமாக அதிகரிக்கும்.
பாதாம் சாப்பிடுவதால் கிட்டத்தட்ட 2000 கலோரிகள் வரை கூடுதலாக நம் உடலில் சேரும் வாய்ப்பு உண்டு.
டாக்சின்
பாதாமில் அதிகளவு ஹைட்ரோசியானிக் அமிலம் நிறைந்திருக்கிறது. இதனை நாம் தொடர்ந்து சாப்பிடும் போது நம் உடலில் அதிகளவு சேர்ந்திடும்.
இதனால் நரம்பு பிரச்சனை, மூச்சுப் பிரச்சனை ஆகியவை ஏற்படக்கூடும். சிலருக்கு இது அலர்ஜியையும் ஏற்படுத்துவ துண்டு.
பாக்டீரியா
உடலில் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு பாதாம் துணை நிற்கும். இதனாலேயே பல நாடுகளில் பாதாம் தீங்கு விளை விக்கக்கூடியது என்று தடை செய்திருக்கிறார்கள்.
இதனால் தான் பாதாம் ஊற வைத்து சாப்பிடும் பழக்கமும் வந்திருக்கிறது.