குழந்தைகளுக்கு ஆபத்தா? வாழைப்பழம் ஒன்றிற்கு மேல் கொடுக்கக் கூடாதாம்! தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று.
இந்த பழத்தில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கும் ஆற்றல் இருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், சர்க்கரை, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன.
இது செரிமானத்துடன் தொடர்புபட்ட நோய்களை இல்லமலாக்குகின்றது. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
இது ஏன்? அப்படி என்ன நடக்கும்? என்பதனை கீழுள்ள பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
வாழைப்பழம் அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
Image - Insider
1. வாழைப்பழத்தில் சுமாராக 100 கலோரிகள் அடங்கியிருக்கின்றது. இது நாளொன்றுக்கு இரண்டு வீதம் சாப்பிட்டால் அதிகமாக உடல் எடையை அதிகரிக்க செய்யும்.
மேலும் பழத்திலுள்ள பொட்டாசியத்தால் தலைசுற்றல், வாந்தி, நாடித் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.
2. வாழைப்பழத்தில் அதிகப்படியான மாவுச்சத்து உள்ளது. இது சாப்பிட்ட பின்னர் பற்களை சுத்தம் செய்யவில்லையென்றால் காலப்போக்கில் பற்களில் துவாரங்களை ஏற்படுத்தி, பற்கள் தொடர்பான பிரச்சினைகள் வருவதற்கு வழிவகுக்கும்.
3. வாழைப்பழத்திலுள்ள வைட்டமின் பி6 ஊட்டசத்து அதிகமாக எடுத்து கொள்ளும் பொழுது அது நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் ஒவ்வாமைகளையும் ஏற்படுத்தும்.
4. பச்சை வாழைப்பழத்தை சமைக்காமல் உட்க் கொண்டால் வாயு தொந்தரவு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
5. அதிகமான வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் மலப் போக்கு அதிகரிக்கும். இதனால் வேகமாக நீங்கள் சோர்வடையலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |