விமானிகள் மேகங்களுக்குள் விமானத்தை கொண்டு செல்வதில்லை ஏன்?
விமானம் வானில் பறக்கும்போது, மேகங்கள் நிறைந்த பகுதிகளை விமானிகள் ஏன் தவிர்கின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
விமான பயணம்
விமான பயணம் என்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம் ஆகும். கீழே இருந்து வானில் செல்லும் விமானத்தை அண்ணார்ந்து பார்த்து மகிழ்ச்சியில் மூழ்கும் மக்கள் நம்மில் அதிகமாகவே இருக்கின்றனர்.
குழந்தைகளாக இருக்கும் போது பறக்கும் விமானத்தை பார்த்து கைதட்டி மகிழ்வது, அதுவே வளர்ந்ததும் பறக்கும் விமானத்தை எப்பொழுது இதில் பயணிப்போம் என்ற ஏக்கத்துடன் பார்ப்பதாகவே இருக்கின்றோம்.
விமான பயணத்தில் கூட சில சுவாரசியமான நிகழ்வுகளும், அதற்கான காரணங்களும் இருக்கின்றது. அந்த வகையில் மேகத்திற்கும் விமானத்தை விமானிகள் ஏன் இயக்குவதில்லை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேகங்களுக்குள் பறப்பது
மேகங்கள் வெறும் நீராவித் திரள்கள் மட்டுமல்ல, அவை பல்வேறு அபாயங்களை உள்ளடக்கியவை என்பதே அதற்குக் காரணம். "இது ஒரு சவாலும் கூடவே ஒரு தீவிர ஆபத்தும்" என்கின்றார் ஏர் போர்ஸ் வீரர் ஒருவர்.
விமானம் மேகங்களுக்குள் பறப்பது விமானிகளுக்கு சவாலானது என்றும் மின்னல் தாக்குதல்கள் விமானத்தின் மின்னணு சுற்றுகளை சேதப்படுத்துமாம்.
விமானத்தின் வழிசெலுத்தல் மற்றும் பாதுகாப்புக்கு இந்த சுற்றுகள் இன்றியமையாதவை என்பதால், இடி மின்னலுடன் கூடிய மேகங்கள் ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்து என்று கூறுகின்றனர்.
மேலும் சில காரணம்
இவ்வாறு மேகங்கள் மற்றும் பனிமூட்டத்தில் விமானம் பறக்கும் போது விமானிகளால் எதையும் பார்க்க முடியாது. கருவிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். இது விமான ஓட்டுதலை மிகவும் கடினமாக்குகின்றதாம்.
குறிப்பாக இடி மேகங்கள்(குமுலோனிம்பஸ்) போன்ற பெரிய மேகங்கள், வலுமான காற்று மற்றும் வெவ்வேறு திசைகளில் நகரும். இந்த காற்று நீரோட்டங்கள் கொந்தளிப்பை ஏற்படுத்துவதுடன், விமான பயணத்தை ஆபத்தாக கூட மாற்றுமாம்.
இடி மேகங்கள் மின்னல், ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மழையை உருவாக்க முடியும். மின்னல் விமானத்தின் மின் அமைப்புகளை சேதப்படுத்தலாம்.
குளிர்ந்த மேகங்களில், நீர் துளிகள் விமானத்தின் மீது, குறிப்பாக இறக்கைகள் மற்றும் என்ஜின்களில் உறைந்துவிடுகின்றது. இது எடை அதிகரித்து காற்று ஓட்டத்தை தடுப்பதுடன், தூக்குதல், கட்டுப்பாட்டையும் பாதிக்குமாம்.
சில மேகங்கள் திடீரென காற்று வேகம் அல்லது திசையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனை காற்று வெட்டுதல் என்று அழைக்கப்படுகின்றது. இவை திடீரென விமானத்தை உயர்த்தவோ அல்லது கீழே தள்ளவோ செய்யலாம். குறிப்பாக புறப்படும் போதும் தரையிறங்கும் போது இவை விமான பயணத்தில் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகின்றது.
இந்த காரணங்கள் தான் விமானிகள் எப்போதும் பயணிகளின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |