முழு நாளையும் வீணாக்கும் தூக்க கோளாறு.. தீர்வு என்ன?
நம்மிள் பலர் நிம்மதியாக தூங்கி பல நாட்களாக இருக்கும். ஏனெனின் தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக இந்த நிலை உருவாகிறது.
ஒருவர் இரவில் சரியான தூக்கம் இல்லாவிட்டால் அவர்களுக்கு அன்றைய நாளை நிம்மதியாக கடக்க முடியாது. மயக்கம், சோர்வு, தலைவலி மற்றும் வேறு விதமான கோளாறுகள் இருந்து கொண்டே இருக்கும்.
நிம்மதியான தூக்கம் வராமல் இருப்பதற்கு மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம், தூக்கமின்மை போன்ற காரணங்களாகவும் அமைகிறது.
மேலும், சில மருத்துவ நிலைமைகள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களும் சில சமயங்களில் காரணமாக இருக்கலாம்.
அந்த வகையில், நிம்மதியான தூக்கம் இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. மன அழுத்தம் மற்றும் கவலை
மன அழுத்தம் மற்றும் கவலை ஆகியன தூக்கம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. இவை தூக்கத்தின் சுழற்சியை சீர்குலைத்து, தூங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும்
2. மோசமான உணவுப் பழக்கம்
இரவில் அதிகளவு உணவு சாப்பிடும் பொழுமு வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதே சமயம் தூக்கம் வராமல் இருக்கும்.
3. தூக்கமின்மை (Insomnia)
தூக்கமின்மை எனப்படுவது ஒரு வகையான தூக்கக் கோளாறாகும். இந்த பிரச்சினை தூங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும். அத்துடன் சிலருக்கு தூங்கினாலும் அடிக்கடி விழிப்பு வரவும் வாய்ப்பு உள்ளது.
4. மருத்துவ நிலைமைகள்
நாள்பட்ட வலி, சுவாசப் பிரச்சனைகள், அல்லது மனநோய் போன்ற சில மருத்துவ நிலைமைகள் காரணமாகவும் தூக்கத்தை சீர்குலைக்கலாம்.
5. வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள்
காஃபின், ஆல்கஹால் உட்கொள்வது, அதிகப்படியான திரவங்களை இரவில் குடிப்பது போன்ற பழக்கங்கள் தூக்கத்தை இல்லாமல் செய்யும். இதனால் காலையில் சோர்வு இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |