ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்க இவ்வளவு செலவு ஆகுமா? ரூபாய் நோட்டின் சீக்ரெட் இதோ
நமது கைகளில் புழக்கத்தில் காணப்படும் ஒரு ரூபாய் நாணயத்தின் தயாரிப்பு செலவு, அதன் மதிப்பினை விட அதிகம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்திய ரூபாயும், தயாரிப்பு செலவும்
பொதுவாக இந்திய ரூபாய் நாணயமாகவும், நோட்டுகளாகவும் நமது கையில் பயன்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஒரு ரூபாய் நாணயத்தினை அச்சிடும் செலவு அதன் மதிப்பினை விட அதிகம்.
அதுவே ரூபாய் நோட்டுகளுக்கு அச்சிடும் செலவு குறைவு என்றாலும் அதின் ஆயுள் காலமும் குறைவாகவே இருக்கும். ஆனால் நாணய தயாரிப்பு செலவு அதன் மதிப்பினை விட அதிகமாக இருந்தாலும், அதிக காலம் பயன்பாட்டில் இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட தகவலின்படி, ஒரு ரூபாய் நாணயம் தயாரிப்பதற்கு 1 ரூபாய் மற்றும் 11 காசுகள் செலவவதாக தெரியவந்துள்ளது.

மேலும் 2 ரூபாய் நாணயத்திற்கு 1.28 காசும், 5 ரூபாய் நாணயத்திற்கு 3.69 காசும், 10 ரூபாய் நாணயத்தினை தயாரிப்பதற்கு ரூ.5.54 காசுகள் செலவாவது தெரியவந்துள்ளது.
அதுவே 10 ரூபாய் நோட்டுக்கு 960 ரூபாயும், 100 ரூபாய் அச்சிட 1770 ரூபாயும், 200 ரூபாய் அச்சிட 2370 ரூபாயும், 500 ரூபாய் அச்சிடுவதற்கு 2290ரூபாயும் செலவாகின்றது. இவை 1000 நோட்டுகளுக்கு இவ்வளவு செலவாகும்.
ரூபாய் நோட்டுகளை அதாவது 1,000 நோட்டுகளை அச்சிட ஆகும் செலவு எவ்வளவு என்றால் ரூ.10 நோட்டு அச்சிட ரூ.960ம், ரூ.100 அச்சிட ரூ.1770ம், ரூ.200 அச்சிட ரூ.2,370ம் ரூ.500 நோட்டுகளை அச்சிட ரூ.2,290ம் செலவாகிறதாம்.
ரூபாய் 2000 நோட்டு அச்சிடுவதற்கு 4 ரூபாய் செலவாகியுள்ளது. இந்த செலவு என்பது கச்சா பொருள்களின் மதிப்பு, இயந்திரங்கள் இயக்கும் செலவீனம், தொழிலாளர் ஊதியம், ஆலய செலவீனம் என அனைத்தும் சேர்ந்தததாகும்.

நாணயம் மட்டும் ஏன் செலவு அதிகமாகிறது?
நாணயம் துருப்பிடிக்காத எஃகு கொண்டு தயாரிக்கப்படுகின்றது. மேலும் இதன் விட்ட 21.93 மி.மீற்றர், தடிமன் 1.45 மி.மீ, எடை. 3.76 கிராம் ஆகும். மத்திய அரசின் காசு தயாரிக்கும் ஆலைகள் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் இயங்குகின்றது.
இங்கு குளிப்பிட்டுள்ள தகவல்கள் ஹைதராபாத் நாணயசாலை வெளியிட்டுள்ள நிலையில், மும்பை நாணய சாலையானது இந்த விடயம் ரகசியம் காக்கப்பட வேண்டிய தரவுகள் என்று மறுத்துள்ளது.

Image: istock
ரூபாய் மற்றும் நாணயங்கள் தயாரிப்பதில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி செயல்படுகின்றது. அதாவது நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் நோட்டு மத்திய அரசும், 2 முதல் 500 ரூபாய் நோட்டு இந்திய ரிசர்வ் வங்கி அச்சிடுகின்றதாம். முன்பு பயன்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டு ஆர்பிஐ அச்சிட்டு வந்துள்ளதாம்.
பணம் மற்றும் நாணயம் அத்தியாவசியமாக இருப்பதால் மதிப்பை விட செலவீனம் அதிகமாக இருந்தாலும், உற்பத்தி செய்வது கட்டாயமாக இருக்கின்றது.

image: istock
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |