உப்பு காலாவதியாகுமா? இது தெரியாம போச்சே எவ்வளவு நாட்கள் வரை பயன்படுத்தலாம்?
உணவுகளில் மிகவும் முக்கியம் வாய்ந்த உப்பு காலவதியாகுமா என்ற சந்தேகம் யாருக்காவது வந்துள்ளதா? அதை பற்றி பதிவில் விரிவாக பார்க்கலாம்.
உப்பு
சமையலறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருள் உப்பு. நாம் எவ்வளவு விலைமதிப்பான உணவை வாங்கினாலும் சமைத்தாலும் அதில் ஒரு சொட்டு உப்பு இல்லை என்றால் அது குப்பையில் தான் போட வேண்டும்.
அது தான் "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" என ஒரு தமிழ் பழமொழி உள்ளது.
இதற்கு அர்த்தம், உப்பு சேர்க்காத உணவு சுவையற்று, வீணாக குப்பைக்குத் தான் போகும் என்பதாகும். அந்த அளவிற்கு உணவுகளில் உப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகின்றது.

ஆனால், கடைகளில் உப்பு வாங்கும் போது அதில் காலவதி திகதி போட்டு இருப்பார்கள். பொதுவாக பல பொருட்களை உப்பை கொண்டு தான் கெட்டு போகாமல் பாதுகாப்பாக வைத்து கொள்வார்கள்.
அப்படி இருக்க உப்பில் காலாவதி திகதி போடப்படுவது ஏன் என்ற கெள்வி தற்போது பலரிடம் காணப்படுகின்றது.
உப்புக்கு Expiry Date இருக்கா? என்று நீங்கள் எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா. இதற்கு பதில் இருக்கிறது.
உப்பு பொதுவாக , பாக்டீரியா மற்றும் கிருமிகளில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி, அவற்றை வளரவே விடாது.

கிருமிகளே வளர முடியாத ஒரு பொருள் எப்படி கெட்டுப்போகும். அதனால், சுத்தமான உப்புக்கு அழிவே கிடையாது. ஆனால் நாம் சாப்பிடும் தூள் உப்பில், அயோடின் சேர்க்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
இந்த அயோடின் காலப்போக்கில் காற்றில் கரைந்து ஆவியாகிவிடும். உப்பு உப்பாக மட்டுமே இருக்கும். ஆனால் சத்து இருக்காது. அதற்கு தான் அந்த Expiry Date கொடுக்கப்படுகிறது.
அதனால் தான் உப்பில் காலாவதி திகதி போடப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த உப்பில் இருக்கும் அயோடீன் அப்படியே காற்றில் கரைந்து அந்த உப்பில் இருக்கும் அயோடீனை கரைத்து விடும். இதனால் தான் உப்பு காலாவதி தகதியுடன் வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |