"மொய்ப்பணம்" வைக்கும்போது, 1 ரூபாய் சேர்த்து வைப்பது ஏன்? இது தான் காரணம்
பொதுவாகவே திருமணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளின் போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகின்றது.
மொய் வைக்கும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற வழக்கம் இன்றும் நடைடுறையில் இருக்கின்றது. இதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பது பற்றிய விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
மொய் வைக்கும் போது நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்று மொய் கொடுக்காமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் தான் மொய் கொடுக்க வேண்டும் என்பது பெரும்பாலானர்வளுக்கு தெரிந்திருக்கும்.
ஆனால், அதற்கான காரணம் தெரியாமலேயே நம்மில் பலரும் இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றோம்.
முன்னைய காலத்தில் பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்களில் மட்டுமே உருவாக்கப்பட்டது.
ஒரு வராகன் பொன் என்பது 32 குன்றி எடை கொண்டதாக இருந்துள்ளது.அவை முன்னோர்களால் முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால்தான், இது தர்மம் தவறாது சம்பாதித்த நாணயம் என முன்னோர்கள் அதுபோலவே, மற்றவர்களும் தர்மம் வழுவாமல் இந்த பணத்தை செலவிடுட வேண்டும் என்பதை நினைவுப்படுத்த வேண்டும் என்ற உன்னதமான நோக்கம் கருதி மதிப்புமிக்க உலோக நாணயங்களை, மொய்ப்பணமாக கொடுக்கும் வழக்கத்தை பின்பற்றினார்கள்.
அதனால் மொய் கொடுப்பவர்களுக்கும் தாங்கள் ஒரு மதிப்புமிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததாக ஒரு மனநிறைவு ஏற்படும்.
ஆனால் பிற்காலத்தில் நோட்டுக்கள் புழக்கத்தில் வந்ததன் அதனை மொய்ப்பணமாக தருபவர் மனதிலும், உண்மையான மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக கொடுக்கவில்லை என்ற கவலை மற்றும் மனக்குறை இருந்துள்ளது.
அதனை இல்லாமல் செய்வதற்கு தான் மொய்ப்பணமாக எத்தனை ரூபாய் கட்டுக்கள் வைத்தாலும், அதனுடன், நிஜமான மதிப்பு கொண்ட, ஒரு வெள்ளி ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் முறையை பின்பற்ற ஆரம்பித்தார்கள்.
அதனால் சிறந்த பரிசை கொடுத்த மனநிறைவு கிடைப்பதுடன்,இன்னொரு காரணமும் இதற்கு கூறப்படுகின்றது.
100, 500 , 1000 என்று ரூபாய் நோட்டுக்களை மொய்யாக கொடுக்கும் போது அந்த உறவுகளுக்கு ஒரு முடிவு கட்டப்பட்ட தொகையை கொடுப்பதாக உணரப்பட்டுள்ளது.
அதனை தவிர்க்கவே மொய் செய்பவர் - மொய் பெறுபவர் என இருவரின் உறவும் நீடிக்கும் வகையில், 101, 501, 1001 என கொடுக்கும் போது இதனால், உறவுகள் வளர்ந்து கொண்டே செல்லும் என்றும் நம்பப்படுகின்றது. அதன் காரணமாகத்தான் மொய் பணத்துடன் ஒரு ரூபாய் நாணயம் சேர்த்து கொடுக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |