இந்த ராசியினர் சிக்கலான பிரச்சினைகளையும் அசால்டா தீர்த்துடுவாங்க... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்ககை மற்றும் விசேட குணங்களில் நேரடியான தாக்கத்தை கொண்டிருக்கும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே வாழ்வில் எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் இவர்களின் புத்திசாலி தனத்தால் சுலபமாக கடந்து சென்று விடுவார்களாம்.
அப்படி கடினமான சூழ்நிலைகளையும் அசால்ட்டாக சமாளிக்கும் திறன் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் அதிக தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் வாழ்வில் பல்வேறு கடினமான பிரச்சினைகளை சந்திக்க நேரிம்.
ஆனால் இவர்கள் அதனை தெளிவான மனநிலையுடன் சரியான முறையில் கடந்து செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எந்த விடயத்தையும் நேர்மையாகவும், உண்மையாகவும் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
வாழ்வில் எவ்வளவு பெரிய சோதனை வந்தாலும் இவர்களின் பெறுமையும் புத்திசாலித்தனமும் அவர்களை அதிலிருந்து விடுவிக்கும்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் சூழ்நிலைகளை சரியாக கையாளுவதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களை சுற்றி எவ்வளவு மோசமான நிலை காணப்பட்டாளும் இவர்கள் மனதையும் முளையையும் அமைதியாக வைத்திருப்பார்கள்.
சரியான நேரத்தில் தெளிவான திட்டங்கள் மூலம் பிரச்சினைகளை எளிமையாக தீர்க்கும் ஆற்றல் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
இவர்கள் எந்த விடயத்தையும் முழுமையாக ஆராய்ந்த பின்னரே முடிவெடுப்பார்கள். சீரான பொறுமையும் அமைதியும் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் சமயோசித புத்திக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவரை்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடந்துக்கொள்ளும் குணத்தை இயற்கையாகவே கொண்டிருப்பார்கள்.
இவர்கள் கடுமையாக சவால்களையும் புத்திவாலித்தனடாக சமாளிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிக்கலான பிரச்சினைக்கும் இவர்களிடம் எளிமையான தீர்வு இருக்கும். இவர்கள் வாழ்வில் எத்தனை முறை வீழ்ந்தாலும் தடையமே இல்லாம அளவுக்கும் மீண்டு வந்துவிடுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |