திலீப்குமார் - ஏ.ஆர்.ரஹ்மான் ஆனது எப்படி? மதமாற்றம் குறித்து மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்!
இந்து மதத்தில் திலீப்குமார் ஆக இருந்தவர் இஸ்லாமிய மத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆனது எப்படி என தனது மதமாற்றத்தை குறித்து சொல்லியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஏ.ஆர்.ரஹ்மான்
சிறுவயதில் இருந்து இசை மீது அதிகம் ஆர்வம் காட்டி வந்த ரஹ்மானுக்கு இசைத் தீனி போட்டு சினிமாவிற்கு அழைத்தது இயக்குனர் மணிரத்னம் தான்.
ரோஜா திரைப்படத்தில் தனது இசைத் திறமையைக் காட்ட ஆரம்பித்த இவர் அடுத்தடுத்து படவாய்ப்புக்களை அள்ளிக் கொண்டே இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் 50ஆவது சுதந்திர தினத்தில் ரஹ்மான் வெளியிட்ட 'வந்தே மாதரம்' என்ற இசைத் தொகுப்பு அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டுச் சேர்த்தது.
இப்படி பல வித்தைகளை தன் இசையால் கொடுத்த இவருக்கு இசையின் புயல் என்றும் ஒரு பெயர் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டு ஓஸ்கார் விருதுகளுக்கும் சொந்தக்காரர் இவர்தான். இன்று வரைக்கும் தன் இசையால் இன்னும் அனைவரையும் நனைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.
மதமாற்றம்
ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில் சில ஆன்மீக குருக்கள் சிலரை சந்திருக்கிறார்.
அப்போது சில ஆன்மீன குருக்களை சந்தித்த வேளையில் சூஃபி என்கிற ஆன்மீக குருவை சந்தித்திருக்கிறார். அவர் சூஃபி என்கிற ஆன்மீக குரு மீண்டும் 10 வருடங்களுக்கு பிறகு தாங்கள் சந்திக்க வருவோம் என காந்திருந்தாக தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து மீண்டும் சூஃபி என்கிற மத குருவை ஏ.ஆர்.ரஹ்மான் சந்திக்க சென்றதாகவும் அப்போது அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற பிறகு வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்ததால் தான் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
மதமாற்றத்திற்குப் பிறகு தன் வாழ்வில் அமைதியான சூழல் ஏற்பட்டதாகவும் வாழ்க்கை நல்லபடியாக சென்றிருக்கிறதாம். மேலும், தன்னுடைய ட்யூன்கள் பல நிராகரிக்கப்பட்ட போது பிரார்த்தனைகள் செய்த பிறகு அவை ஏற்கப்பட்டிருக்கிறது.
சூஃபி புத்தகங்களை வசிக்க ஆரம்பித்த பின் புது அனுபவம் கிடைத்ததாகவும் வேறு மதத்தை தழுவிய பின்னர் எந்த ஒரு அழுத்தமும் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |