50 ஆண்டுகளுக்கு முன்.. ஏஆர் ரஹ்மான் எப்படியிருக்கிறார் தெரியுமா? மகன் போட்ட கமெண்ட்
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் ஏ.ஆர் ரஹ்மான்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று மாபெரும் சாதனையை நிகழ்த்தினார்.
இவரது இயற்பெயர் திலீப் குமாராக இருந்தாலும், தன்னுடைய 23வது வயதில் இஸ்லாம் மதத்தை தழுவிக்கொண்டு, அல்லா ரக்கா ரஹ்மான் என பெயரை மாற்றிக்கொண்டார்.
இவருடைய 9வது வயதில் தந்தை இறந்துவிட, கஷ்டமான சூழலில் வளர்ந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான், குடும்பத்தின் வறுமையான சூழலால் தனது 25 வயது வரை தற்கொலை எண்ணம் இருந்ததாக அவரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பல சோதனைகளுக்கு பின்னர், சினிமாவில் இசையமைப்பாளராக ஜொலிக்கத் தொடங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இன்று வரை அவரது இசையில் வெளியான பாடல்கள் பலருக்கும் மருந்தாகியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் இன்ஸ்டாவில் இவர் வெளியிட்ட சிறுவயது புகைப்படத்திற்கு பலரும் லைக்ஸ்களை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
இந்த படத்துக்கு அவரது மகனான அமீன், இதயத்தை பறக்கவிட்டுள்ளார், இதோ அந்த புகைப்படம்