“மூப்பில்லா தமிழ்“ பாடலுக்கு ஆனந்த் மகேந்திராவின் கருத்து! உங்களுடைய வாகனம் மட்டுமல்ல: ஏ.ஆர்.ரகுமான் பதில்
மூப்பில்லா தமிழே தாயே பாடலைக் கேட்டு ரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டினார்.
ஒட்டுமொத்த உலகத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வாகனமாக 'மூப்பில்லா தமிழ்' இருக்கிறது என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ராவின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
மூப்பில்லா தமிழ்
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், மூப்பில்லா தமிழே தாயே என்ற இசை ஆல்பம் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலுக்கான வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார்.
சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர்.அமீன், ரிவி நடிகை கேப்ரில்லா, பூவையார் உள்ளிட்ட பலர் மூப்பில்லா தமிழே தாயே பாடலை பாடியுள்ளனர். கடந்த 24-ம் தேதி துபாயில் நடைப்பெற்ற எக்ஸ்போவில் இப்பாடல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏ.ஆர்.ரஹ்மானின் மஜ்ஜா யூ-ட்யூப் தளத்திலும் இப்பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கானது.
முதலமைச்சர் ஸ்டாலின
சில தினங்களுக்கு முன்பு துபாய் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கும் விசிட் செய்தார். அப்போது மூப்பில்லா தமிழே தாயே பாடலைக் கேட்டு ரசித்து, ரஹ்மானை பாராட்டினார்.
ஆனந்த் மஹிந்திராவின் பதிவு
இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ’இதில் இடம்பெற்றிருக்கும் பைக் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. அருமையான இசை மற்றும் வீடியோ’ எனப் பாராட்டியிருந்தார்.
இதில் இடம்பெற்றிருக்கும் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. அருமையான இசை மற்றும் வீடியோ. @arrahman 👏🏽👏🏽👏🏽https://t.co/YBSbRhhdID
— anand mahindra (@anandmahindra) March 27, 2022
தற்போது ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்திருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், “மிக்க மகிழ்ச்சி! காணொளியில் உங்களுடைய வாகனம் மட்டுமன்று, ஒட்டுமொத்த உலகத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வாகனமாக 'மூப்பில்லா தமிழ்' இருக்கிறது என்றும் சொல்கிறோம்! மிக்க நன்றி!” என பதிலளித்திருக்கிறார்.
மிக்க மகிழ்ச்சி!
— A.R.Rahman (@arrahman) March 29, 2022
காணொளியில் உங்களுடைய வாகனம் மட்டுமன்று,
ஒட்டுமொத்த உலகத்தையும்
முன்னெடுத்துச் செல்லும்
வாகனமாக
'மூப்பில்லா தமிழ்' இருக்கிறது
என்றும் சொல்கிறோம்! ☺
மிக்க நன்றி! https://t.co/IWx7VqvOUl