நண்பரையே திருமணம் செய்யும் யோகம் கொண்ட பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாக ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி அவர்களின் வாழ்க்கை துணை பற்றி நிச்சயம் சில கனவுகள் மற்றும் ஆசைகளை கொண்டிருப்பது இயல்பு.
அப்படி நமது விரும்பத்துக்கு பெருந்தும் நபர்களை சந்திக்கும் போது காதல் உணர்வு தானகவே தோற்றுகின்றது.

யாருக்கு யார் மீது எப்போது காதல் தோன்றும் என்பது புரியாத புதிராகவே இருந்தாலும் பெரும்பாலானவர்கள் பார்த்தவுடனேயே காதல் கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆனால் சிலர் நன்றாக பழகி முழுமையாக அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களை புரிந்துக்கொண்ட பின்னர் தான் காதலிக்கவே ஆரம்பிப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களின் நீண்ட நாள் நண்பனையே காதலனாக பெறும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

அன்பு மற்றும் காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் விசுவாசத்துக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் குடும்ப உறவுகளுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர்களாகவும், யாருக்காகவும் குடும்பத்தை விட்டுக்கொடுக்காதவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த ராசி பெண்கள் புது உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும் ஒவருரை நம்புவதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள்.
நன்றாக தன்னை புரிந்துக்கொண்ட நபர் தான் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணம் நெருங்கிய நண்பரையே திருமணம் செய்ய முக்கிய காரணியாக இருக்கும்.
கடகம்

கடக ராசியினரும் சுக்கிரனால் ஆளப்படுவதால் இவர்களுக்கும் காதல் உறவு மீது தனித்துவமான ஈர்ப்பும் மரியாதையும் இருக்கும்.
ஆனால் இந்த ராசி பெண்கள் காதலனை தெரிவு செய்வதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கை துணையை தெரிவு செய்த பின்னர் யாருக்காகவும் அவர்களை விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.
அவர்களின் அனைத்து உறவுகளும் நம்பிக்கை மற்றும் பாசத்தின் அடிப்படையில் அமைந்தவையாகவே இருக்கும். அதனால் இவர்களின் திருமணமும் நன்றான புரிந்துக்கொண்ட ஒரு நண்பனுடன் தான் நிகழும்.
துலாம்

துலாம் ராசியில் பிறந்த பெண்கள் நல்லிணக்கம் மற்றும் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணத்தை பிறப்பிலேயே கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி பெண்கள் தங்கள் சிறந்த நண்பனுடன் வலுவான உணர்ச்சிப்பூர்வமான பிணைப்புகளை உருவாக்கிக்கொள்கிறார்கள், இவர்களின் திருமண வாழ்க்கை நிச்சயம் ஒரு நண்பருடன் தான் அமையும்.
அவர்களின் அன்புக்கும் தோழமைக்கும் மதிப்பு கொடுக்கும் குணம், விசுவாசத்துகு முன்னுரிமை கொடுக்கும் இவர்களின் இயல்பு என்பன இவர்களுக்கு நண்கரையே வாழ்க்கை துணையாக மாற்றுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |