ஆனந்த் அம்பானிகாக பார்த்து பார்த்து செய்யப்பட்ட வாட்ச்! விலை எத்தனை கோடி தெரியுமா?
ஆடம்பர கடிகார தயாரிப்பு நிறுவனமான ஜேக்கப் அண்ட் கோ (Jacob and Co) ஆனந்த் அம்பானிக்காக பிரத்தியேக முறையில் உருவாக்கியுள்ள வந்தாரா (Vantara) என்ற கடிகாரம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடம் வகிப்பவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி. இவருடைய இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கு அறிமுகமே தேவையில்லை.

ஆனந் அம்பானிக்கு விலங்குகள் பராமரிப்பில் ஆர்வம் ஆதிகம். இவர் குஜராத் மாநிலத்தில் வந்தாரா என்ற பெயரில் விலங்குகள் நல காப்பகத்தை வைத்து நடத்தி வருகிறார்.
சமீபத்தில் வந்தாராவை இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாற்றியதற்காக தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்திருந்தார்.

ஜேக்கப் அண்ட் கோ தயாரிப்பு
இந்த நிலையில் ஆடம்பர கடிகார தயாரிப்பு நிறுவனமான ஜேக்கப் அண்ட் கோ (Jacob and Co) கோடீஸ்வரர் அனந்த் அம்பானிக்காக பிரத்தியேக வந்தாரா (Vantara) என்ற கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளது.
இந்த தனித்துவமான கடிகாரம் விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டு தனித்துவமான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வனவிலங்கள் மீதான ஆனந் அம்பானியின் தனிப்பட்ட அக்கறையையும் அன்பையும் வெளிப்படுத்துகின்றது.

கடிகாரத்தின் விலை
இந்த கடிகாரம் வெள்ளை தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இது 397 விலையுயர்ந்த ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
யானை, சிங்கம் மற்றும் புலிகள் போன்ற விலங்குகளுடன் அவர் கடிகாரத்தின் (ஆனந் அம்பானியின் ஒரு மினி 3D உருவம்) நடுவில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். இந்த கடிகாரத்தில் சுழலும் உருண்டை மற்றும் நகரும் சிறிய விலங்குகள் உள்ளன.
அதிகாரப்பூர்வமாக இந்த சிறப்பு கடிகாரத்தின் விலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும் சில செய்தி அறிக்கைகள் கடிகாரத்தின் விலை சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று குறிப்பிடப்படுகின்றது.(£1.1 மில்லியன், 137 மில்லியன் ரூபாய்) என மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |