Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்!
பராசத்தி படப்பிடிப்பின் போது நடிகர் சிவக்கார்திகேயன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் கோபமாக பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி புதிய புயலை கிளப்பி வருகின்றது.
பராசக்தி திரைப்படம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் அண்மையில் வெளியாக திரைப்படம் தான் பராசக்தி.

ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நூறு கோடிக்கு மேல் வசூலித்துத்துள்ளது.

அவ்வப்போது பராசக்தி திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.அந்தவகையில் தற்போது ஒரு காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Namma jollya fun panitu irukarthunala namma work and life serious ila nu ninachikaranga. We are prepared more than enough. Super reply sk🔥. I experienced this in my life. Anyone experienced ?#Sivakarthikeyan pic.twitter.com/TqWdZX1rWE
— Dr Gv (@Drgvm5) January 27, 2026
குறித்த காணொளியில், பராசக்தி படப்பிடிப்பில் போது, இயக்குனர் சுதா ஸ்கிரிப்ட் ரீடிங் யாருமே செய்திருக்க மாட்டார்கள், மணி சார்-டிம் வேலை பார்த்ததால், ரவி மட்டும் செய்திருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
உடனே சிவகார்த்திகேயன், நீங்க இப்படியெல்லாம் முடிவு பண்ணாதீங்க, ஏதோ என் வாழ்க்கையில சேர்ந்து வாழ்த்து பார்த்த மாதிரியே பேசுறீங்க,நாங்களும் அதெல்லாம் பண்ணிருக்கோம் மேடம், அமரன், மதராஸி படங்களுக்கு ஸ்கிரிப்ட் ரீடிங் பண்ணிருக்கோம்' என கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |