உலகின் தலைசிறந்த தலைவிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தலைமைத்துவ குணங்கள் மற்றும் சிறந்த நிதி முகாமைத்துவ அறிவுடையவர்களாக இருப்பார்களாம்.
அப்படி தலைசிறந்த தலைவிகளாக மாறக்கூடிய சிறந்த ஆளுமை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படுவதால், இவர்களிடம் மற்ற பெண்களிடம் இல்லாதளவு அசாத்திய தைரியம் இருக்கும்.
இவர்கள் இயற்கையாகவே சிறந்த திறமையான தலைவர்களாக இருப்பதற்குத் தேவையான அனைத்து குணங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ஒரு கூட்டத்துக்கு மத்தியில் உண்மையை பேசுவதற்கும், மற்றவர்களை கட்டுப்படுத்தும் வகையில் நடந்துக்கொள்வதற்கும் ஒருபோதும் தயக்கம் காட்டுவது கிடையாது. இவர்களின் இந்த தனித்துவமான குணங்கள் ஒரு சிறந்த தலைவியாக மாறுவதில் பெரிதும் தாக்கம் செலுத்தும்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே வாழ்வில் உண்மைக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்களாம்.
இவர்களிடம் நிச்சயம் பிடிவாத குணம் மற்றும் லட்சிய தாகம் இருக்கும் அவர்கள் தங்களின் நிலையை மேம்படுத்த அயராது உழைக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
யதார்த்தமான நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருந்தாலும், தங்கள் இலக்குகளை அடைவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
அவர்ளிடம் மற்றவர்களை நல்ல பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற உன்னத குணம் இயல்பாகவே இருப்பதால் சிறந்த தலைவிகளாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் ரகசிய இயல்புக்கு பெயர் பெற்றவர்களாகவும் அசாத்திய தைரியசாலிகளாகவும் இருப்பார்கள்.
இவர்கள் சக ஊழியர்களுடன் தங்களின் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய கடினமாக உழைப்பார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களை நல்ல தலைவியாக மாற்றுகின்றது.
தங்களின் கூட்டத்தை சரியாக தயார்படுத்தினால் ஒற்றுமையாக சேர்ந்து மலையைக் கூட தூக்க முடியும் என்ற கோட்பாட்டை முழுமையாக மதிக்கின்றார்கள்.அதனால் அவர்கள் ஒரு சக்திவாய்ந்த தலைவியாக இருக்கின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |