உடல் எடையைக் குறைக்கும் தட்டை பயறு! எவ்வாறு சாப்பிட வேண்டும்?
இன்றைய வேகமான உலகத்தில் பல விஷயங்கள் மாறிவிட்ட நிலையில் குறிப்பாக உணவு பழக்கங்களும் மாறியுள்ளது. அவசரமான உலகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் பல ஜங்க் உணவுகளை உண்ண ஆரம்பித்துவிட்டோம்.
இதனால் உடல் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்டது. இதுவே அக்காலத்து ஆட்கள் என்றால் இந்த வயதிலும் கூட ஆரோக்கியமாக இருப்பதை நாம் காணலாம். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடித்து வந்ததாலேயே.
ஆரோக்கியமான உணவுகளில் பயறுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. தட்டை பயறு என்பது பயறு குடும்பத்தை சேர்ந்தவையே. இந்தியர்கள் உபயோகப்படுத்தும் வெகு சில பயறுகளில், கருப்பு கண்களை கொண்ட பயறு என அழைக்கப்படும் தட்டை பயறும் இடம் பெறும்.
உடல் எடையை குறைக்க உதவும்
இந்த கருப்பு நிற கண்களை கொண்ட பயறுகளில் கலோரிகளும் கொழுப்புகளும் குறைவாகவே உள்ளதால் உடல் எடையைக் குறைக்கின்றது. நார்ச்சத்து அதிகமாக இருக்கும் இதனை டயட்டிற்கு எடுத்துக்கொள்ளலாம். இதனை உட்கொள்ளும் போது, நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வை அளிக்கும்.
தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்
தட்டை பயறுகளில் வைட்டமின் ஏ போன்ற ஆண்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளதால், பல வகையான நோய்கள் அண்டாமல் தடுப்பதில் இது முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த பயறை உட்கொள்வதால் பல வகையான தீய நச்சுக்களையும் ஆக்சிஜன் இல்லாத இயக்க உறுப்புகளை உடலில் இருந்து நீக்கி உடல்நலத்தை பராமரிக்க உதவுகிறது.
உங்க வீட்டுல சிட்டுக்குருவி கூடு கட்டினால் அதிர்ஷ்டமாம்! சுவாரசியமான தகவல்
சர்க்கரை நோய்க்கு நல்லது
மற்ற பயறு வகையில் உள்ளதை விட தட்டை பயறுகளில் உள்ள க்ளைசெமிக் இன்டெக்ஸ் (GI) குறைவாகவே உள்ளது. சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள உணவுகள் மிகவும் நல்லது. அதற்கு காரணம், இவ்வகை உணவுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இயல்பு வீதத்தில் வைத்திருக்க உதவும்.
குறைந்த அளவிலான இரத்த கொலஸ்ட்ரால்
இரத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இருதய சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறனை கொண்டுள்ளது கருப்பு கண்களை கொண்ட தட்டை பயறு.
தட்டை பயறுகளில் ஃப்ளேவோனாய்டுகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள், கரையா நார்ச்சத்து (லிக்னின் என்ற ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்) போன்றவைகள் இருப்பதால், இதயத்திற்கு உகந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது
தட்டை பயறுகளில் அதிகளவிலான நார்ச்சத்தும், புரதமும் அடங்கியுள்ளது. இதனால் உங்கள் வயிறில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, செரிமான செயல்முறைக்கு உதவிடும். நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கி, வயிற்று சுகவீனம் சரியாகி, உணவுகள் செரிக்க உதவிடும்.
ஆரோக்கியமான சருமத்திற்கு நல்லது
தட்டை பயறுகளில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால் சருமத்தை சீர் செய்யும் செயல்முறையை தூண்டி விட்டு, ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க இது உதவும்.
தட்டை பயறுகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி இருப்பதால் தான் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் நிறைந்துள்ளது. இதனால் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, உங்கள் சரும அணுக்களை தட்டை பயறுகள் காக்கும்.
தட்டை பயறு குழம்பு செய்யும் முறை
தேவையான பொருட்கள்
- தட்டை பயிறு - 1/2 கப்
- எண்ணெய் - 2 tsp
- வெந்தயம் - 1/2 tsp
- சீரகம் - 1/2 tsp
- உளுத்தம் பருப்பு - 1/2 tsp
- வெங்காயம் - 1
- பூண்டு - 10 பற்கள்
- கருவேப்பிலை - சிறிதளவு
- தக்காளி - 1
- புளி - எலுமிச்சை அளவு
- சாம்பார் பொடி - 1 tsp
- மஞ்சள் பொடி - 1/4 tsp
- உப்பு , தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
- அரைக்க தேங்காய் - 1/4 கப்
- சோம்பு - 1 tsp
செய்முறை :
தட்டை பயிறை கழுவி எடுத்துக்கொள்ளவும். தேங்காய் மற்றும் சோம்புவை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும்.
தக்காளியை சேர்த்து நன்கு வதக்கியபின் கழுவி வைத்துள்ள காராமணியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5 நிமிடங்கள் நன்கு வதக்கிய பின் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வதக்குங்கள்.
அடுத்ததாக புளி கரைசலை ஊற்றுங்கள். கொதிநிலையை அடையும்போது அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்துக் கொள்ளவும்.
தற்போது குக்கரை மூடிவிடவும். 3 முதல் 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து, பிரெஷர் குறைந்ததும் குக்கரைத் திறந்து கொத்தமல்லி தழைகளைத் தூவுங்கள்.