மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசியினர்... இவங்க கிடைச்சா விட்டுறாதீங்க!
பொதுவாகவே மனிதர்களாக ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்வில் திருமணம் என்பது முக்கியமான ஒரு அங்கமாக பார்க்கப்படுகின்றது. காரணம் திருமணத்தின் பின்னர் ஒருவருடைய வாழ்க்யே முற்றிலும் மாறிவிடும் வாய்ப்பு காணப்படுகின்றது.
பெரும்பாலான பெண்கள் திருமணத்தின் பின்னர் கணவரால் கட்டுப்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் திருமணத்துக்கு பின்னர் தங்களின் மனைவியின் சொல்லை அப்படியே கேட்டு நடப்பார்களாம்.

அப்படி மனைவியின் அனைத்து விருப்பங்களையும், ஆசைகளையும் முழுமையாக மதித்து நடக்கும் கணவனான திகழும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் தங்களின் அடக்கியாளும் தன்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஆனால் திருமணத்தின் பின்னர் மொத்தமான மனைவின் சொல்லை கேட்டு நடக்கும் குணம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். இவர்கள் நாட்டுக்கே அரசனான இருந்தாலும், இவர்களின் மனைவின் அன்புக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
இந்த ராசி ஆண்கள் மனைவியை கட்டுப்படுத்தும் ஆற்றலை கொண்டிருந்தாலும் கூட காதலின் காரணமாக மனைவியை ஒரு அரசி போல் நடத்துவார்கள். மனைவியின் ஆசையை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லும் குணம் இவர்களுக்கு இருக்கும்.
மகரம்

ஒழுக்கத்தின் கிரகமான சனிபகவானால் ஆளப்படும் மகர ராசி ஆண்கள் திருமணத்துக்கு முன்னர் கட்டுக்கு அடங்காத காளையாக இருப்பார்கள். இவர்களை யார் சொல்லையும் எளிதில் கேட்க மாட்டார்கள்.
ஆனால் திருமணத்தின் பின்னர் மனைவிக்கான தங்களின் குணங்களை மாற்றிக்கொள்ள தயாராகிவிடும் இவர்கள் சிறந்த கணவனாக மாறுகின்றார்கள். இவர்கள் தங்களின் ஆசைக்கு அப்பால் மனைவியின் விருப்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கும், சுதந்திரத்துக்கும் பஞ்சமே இருக்காது.இவர்கள் காதலுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
கும்பம்

கும்ப ராசியினர் பிறப்பிலேயே சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் சுதந்திரத்துக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மனைவிக்கு கொடுக்கின்றார்கள்.மனைவிக்கு மதிபளிக்கும் உன்னத குணம் இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும்.
அந்த ராசி ஆண்களை பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு புனிதமான பந்தமாகும். எவ்வளவு துன்பம் வந்தாலும் வாழ்க்கை துணையை விட்டுவிட கூடாது என்பதில் உறுதியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |