உருவாகும் தசாங்க யோகம் - தீபாவளிக்கு முன்னர் 3 ராசிகளுக்கு ஜாக்பட் தான்
ஜோதிட சாஸ்திரத்தின்படி குறிப்பிட்ட கிரகங்களின் மாற்றத்தால் சில ராசிகளுக்கு அவர்களின் எதிர்கால பலன் மாற்றமடையும். அந்த வகையில் வேத ஜோதிடத்தின் படி குருவும், புதனும் இணைந்து தசாங்க யோகத்தை உருவாக்குகின்றனர்.
இதனால் 3 ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். ஜோதிட சாஸ்திரங்களின்படி செப்டம்பர் 16 ஆம் தேதி இரவு 8:53 மணிக்கு குருவும், புதனும் ஒருவருக்கொருவர் 36 டிகிரியில் சந்திக்கின்றனர்.
கிரகங்களின் இளவரசனான புதன் தற்போது கன்னி ராசியில் இருக்கின்றார். இவர் குருவுடன் 36° டிகிரி இடைவெளியில் அமர்ந்து தசாங்க யோகத்தை உருவாக்குகிறார். இந்த யோகத்தால் பலன் பெறும் மூன்று ராசிகளையும் அவர்களுக்கான பலனையும் எதிர்பார்க்கலாம்.
ரிஷபம் - குரு மற்றும் புதனின் இணைவால் உருவாகும் தசாங்க யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டாகும்.
பணத்திற்காக தள்ளிபோட்ட வேலைகள் தற்போது நடைபெற வாய்ப்பு நிறைய இருக்கு. நிதியில் குறிப்பிட தக்க அளவில் முன்னேறி செல்வீர்கள்.
வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்களும், வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் விலகி நல்ல மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும்.
சிம்மம் - தசாங்க யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்க இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேறி செல்ல இது நல்ல வாய்ப்பு.
தொழில்துறையில் பல புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள் வணிகத்தில் நிறைய லாபத்தை எதிர்பார்க்கலாம் . புதிய உத்திகளை கையாண்டு நிதி நிலைமையை பெருக்குவீர்கள்.
தற்போது நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு நல்ல பாராட்டுடன் அதிக சம்பளமும் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. பணமத்திற்கு குறைவு இருக்காது.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் குருவின் சேர்க்கையால் உருவாகும் தசாங்க யோகம் பல வழிகளில் நன்மைகளைத் தரும். இந்த யோகத்தின் காரணமாக உங்கள் வாழ்க்கையில் பொன், பொருள், வசதிகள் அதிகரிக்கும்.
வேலை பற்றி கவலை தேவை இல்லை நல்ல வேலையுடன் அதிக சம்பளமும் கிடைக்கும்.
வேலைப்பளு குறைந்து மன நிம்மதி கிடைக்கும். கடன் தொல்லைகள் நீங்கி மன அமைதி கிடைக்கும். உங்கள் தொழிலை விரிவாக்கம் பல வழிகள் தேடி வரும்.
புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் வெற்றிகரமாக தொழிலை தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை உண்டாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).